Home
News

ரூ.15,000 விலைக்கு வந்த HMD Fusion.. 1 போன் தான் ஆனா 6 லுக்.. இந்த வருடத்தில் மிஸ் பண்ணவே கூடாத ஆஃபர்..

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான எச்எம்டி பியூஷன் (HMD Fusion) மாடல் மீது தற்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையில் மூலம் எச்எம்டி பியூஷன் ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது ரூ. 15,000 விலை புள்ளியில் வாங்க (HMD Fusion OFFER Price) கிடைக்கும் அளவிற்கு மலிவான விலை பிரிவிற்குள் வந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடவே கூடாது மக்களே.

இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனம் உலக சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த சாதனம் இந்திய சந்தைக்குள் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த HMD Fusion போனின் சிறப்பம்சமே இந்த டிவைஸ் 1 பாடியுடன் 6 வெவ்வேறு விதமான பேக் பேனல்களை ஆதரிக்கும் அம்சம் கொண்டதாக வெளியிப்பட்டுள்ள ஒரு விசித்திரமான ஸ்மார்ட்போனாகும்.

ரூ.15,000 விலைக்கு வந்த HMD Fusion.. 1 போன் தான் ஆனா 6 லுக்..

ரூ.15,000 விலைக்கு வந்த HMD Fusion.. 1 போன் தான் ஆனா 6 லுக்:

இதன் ஹைலைட் அம்சமாக இதன் ஸ்மார்ட் அவுட்ஃபிட் சிஸ்டம் (Smart Outfit system) பார்க்கப்படுகிறது. இந்த போனின் பேக் பேனல்களில் 6 பின் கனெக்டரை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பயனரும், அவர்களுக்கு விருப்பமான பேக் பேனல் அவுட்ஃபிட்டை தனியாக வாங்கி, இத்துடன் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் கேமிங் அவுட்ஃபிட் (Gaming Outfit) பேனல் கிடைக்கிறது. இது கேமர்களுக்கானது.

இது தவிர பிளாஷி கேமரா சர்க்கிளிங் LED லைட் அவுட்ஃபிட் (Flashy Outfit with a camera-circling LED light) போன்றவற்றை கிடைக்கிறது. அடுத்தபடியாக ரக்டு அவுட்பிட் (Rugged Outfit) மற்றும் கேசுவல் அவுட்ஃபிட் (Casual Outfit) என்று பல பேனல்களை வழங்குகிறது. புதிய HMD Fusion ஸ்மார்ட்போன் சாதனம் 6.56" இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை ஆதரிக்கிறது.

எச்எம்டி பியூஷன் (HMD Fusion):

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) உடன் 8GB ரேம் (RAM) மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு பயனர்கள் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) வழியாக 1TB வரையிலான ஸ்டோரேஜ்ஜை அணுகலாம். இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வெளிவரும்.

இது 108MP டூயல் ரியர் கேமராவை (dual rear camera) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP செல்பி கேமராவை (selfie camera) கொண்டுள்ளது. இது IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் பாதுகாப்புடன் வருகிறது இந்த புதிய எச்எம்டி பியூஷன் (HMD Fusion) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி (Battery) உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் (Fast charging) ஆதரவை கொண்டுள்ளது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில்,

எச்எம்டி பியூஷன் விலை (HMD Fusion Price):

இந்த புதிய HMD Fusion ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் ரூ. 22,999 என்ற அசல் விலையுடன் விற்பனைக்கு வந்தது. இப்போது அமேசான் இந்தியா தளத்தில் நடைபெறும், சிறப்பு சலுகையில் ஒரு பகுதியாக, இந்த போனின் மீது சுமார் 22% விலை தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த போனின் விலை ரூ. 17,999 என்று குறைந்துள்ளது.

இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, 26 வங்கி சலுகைகள் கிடைக்கிறது. இந்த சிறப்பு வங்கி சலுகையுடன் இந்த போனின் விலையை ரூ. 2000 வரை உங்களால் குறைத்து வாங்க முடியும். இந்த சிறப்பு வங்கி சலுகைக்கு பிறகு, HMD Fusion போனை வெறும் ரூ. 15,999 விலைக்கு வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Fusion Available For Rs 15999 In Amazon Sale Buy Now Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X