Home
News

விலை குறைஞ்சுடுச்சு.. இலவச ஆக்சஸரீஸ் உடன் மீண்டும் விற்பனையில் HMD Barbie Phone.. என்ன விலை? எங்கே வாங்கலாம்?

எச்எம்டி (HMD) நிறுவனம் அதன் பியூச்சர் போன் (Feature phone) வரிசையில் அறிமுகம் செய்துள்ள ஒரு அட்டகாசமான கலர்புல் சாதனம் தான் புது எச்எம்டி பார்பி போன் (HMD Barbie Phone). இந்த சம்மர் விடுமுறைக்கு ஏற்ற ஒரு சரியான மொபைல் சாதனம் என்றால், அது இந்த எச்எம்டி பார்பி போனாக தான் இருக்க முடியும். உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து விலகி, உங்கள் குடும்பத்துடன் வெகேஷன் நேரத்தை முழுமையாக செலவிட இந்த ஒரு போன் உங்களிடம் இருந்தால் போதும் மக்களே. HMD நிறுவனம் இப்போது சலுகையுடன் இந்த மொபைலை மீண்டும் ரீஸ்டாக் செய்துள்ளது.

கோடை காலம் வந்துவிட்டாலே விடுமுறை (holidays) வந்துவிட்டது என்பது தான் பொருள். அதேபோல், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்ப நபர்களை வெக்கேஷன் (summer vacation) அழைத்து செல்ல வேண்டிய கட்டாயமும் இந்த காலக்கட்டத்தில் தான் அதிகமாக நடக்கிறது. வருடத்தில் ஒரு முறையாவது, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் முழுமையாக இணைந்து நேரம் செலவிட வேண்டியது முக்கியம். இன்றைய காலத்தில் இதை செய்ய உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து விலகி இருக்க வேண்டியது கட்டாயம்.

விலை குறைஞ்சுடுச்சு.. இலவச ஆக்சஸரீஸ் உடன் HMD Barbie Phone விற்பனை..

விலை குறைஞ்சுடுச்சு.. மீண்டும் விற்பனையில் HMD Barbie Phone.. இந்த முறை இலவச ஆக்சஸரீஸ் உடன்:

எப்போது நமது கையில் ஸ்மார்ட்போன்கள் (smartphone) வந்ததோ, அப்போதிலிருந்து சமூக வலைத்தளங்கள் (social media) மற்றும் யூடியூப் (YouTube) போன்றவை நம்மிடம் இருக்கும் சொற்ப ஃப்ரீ டைம் (free time) நேரத்தையும் ஆக்கரமித்து விட்டன. ஒரே குடும்பத்துடன் எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்குள் தான் மூழ்கி கிடைக்கிறோம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், அதிக நேர ஸ்மார்ட்போன் பயன்பாடும் நல்லதல்ல என்கின்றனர் வல்லுநர்கள்.

வருடத்தில் ஒருமுறையாவது, ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமாவது, கட்டாயம் மக்கள் அனைவரும் அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, குடும்பத்துடன் முழுமையாக நேரம் செலவழிப்பது முக்கியமானது என்றும் வலியுறுத்துகின்றனர். இதை செய்யும் நேரத்தில், உங்கள் தொலைத்தொடர்பு சேவை (telecom) இணைப்பை உறுதி செய்ய சமூக வலைத்தள அணுகல் இல்லாத ஒரு மொபைல் (mobile) இருக்க வேண்டும்.

எச்எம்டி பார்பீ போன் 2024 (HMD Barbie Phone 2024):

இதை சரியாக செய்ய உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு தான் இந்த புதிய எச்எம்டி பார்பீ போன் (HMD Barbie Phone). இதுவொரு ஃபிலிப் டைப் பியூச்சர் போன் (flip type feature phone) சாதனமாகும். ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்கள் இதில் இல்லை என்றாலும், உங்கள் வெக்கேஷன் நாட்களில் நிகழும் நிகழ்வுகளை படம்பிடிக்க இதில் கேமரா (camera) உள்ளது. ஒரே சார்ஜிங்கில் பல நாட்கள் வரை, உங்களை தொலைத்தொடர்பு சேவையுடன் இணைத்து வைக்க உதவும் நிலையான பேட்டரி ஆயுள் (long term battery life mobile) கூட இதில் உள்ளது.

இன்னும் பல பியூச்சர் போன் (feature mobile phone) அம்சங்களுடன் இந்த HMD Barbie Phone, பார்பி தீம் (Barbie theme) உடன் கண்களை கவரும் பவர் பிங்க் (power pink) நிற தோற்றத்தில் வெளிவந்துள்ளது. இந்த போன் இப்போது பல கூடுதல் இலவச ஆக்சஸரீ (free accessories) உடன் வருகிறது. 3 வகையான பேக் கவர்களில் இருந்து எதனெனும் 2 பேக் கவர்களை (back cover) நீங்கள் தேர்வு செய்துகொள்ளும் வசதியை HMD வழங்கியுள்ளது. போன் டேக் (phone tag), போன் ஹோல்டர் ரோப் (phone holder rope), ஸ்டிக்கர்ஸ் (stickers) மற்றும் பல ஆக்சஸரீஸ்களை HMD இந்த போனுடன் வழங்கியுள்ளது.

எச்எம்டி பார்பி போன் சலுகை விலை (HMD Barbie Phone offer price):

HMD Barbie Phone இந்தியாவில் ரூ. 10,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே இந்த மொபைல் மொத்தமாக விற்று முடிந்தது. இப்போது HMD நிறுவனம் மீண்டும் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் HMD Barbie Phone சாதனத்தை ரீஸ்டாக் செய்துள்ளது. இப்போது சலுகையுடன் இந்த போனை வெறும் ரூ. 7,999 என்ற விலையில் (HMD Barbie Phone offer price) வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்கவர் கலருடன் ஒரு அருமையான மொபைல் வாங்க ஆசை இருந்தால், உடனே இந்த போனை வாங்கிக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Barbie Phone 2024 Flip Feature Mobile Now On Offer Price Sale Started With Free Accessories Kit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X