நடுவுல இந்த HiSense வந்தா? சுவர் ஃபுல்லா ஸ்க்ரீன் தான்.. நியாயமான விலையில் புதிய ஸ்மார்ட்டிவி!

|

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் ஸ்மார்ட்டிவி சந்தைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.

பல்வேறு நிறுவனங்களும் புதுப்புது அம்சங்களோடு வெவ்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஹைசென்ஸ் நிறுவனம் மேம்பட்ட ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்..

புதிய ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்..

HiSense நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட் டிவி மாடலாக இது வெளியாகி இருக்கிறது.

அது U7H TV மற்றும் A7H ஆகும். U7H TV சீரிஸ் இல் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவு மாடல்கள் அறிமுகமாகி இருக்கிறது. அதேபோல் A7H இல் 55 இன்ச் மாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது.

U7H சீரிஸ் ஸ்மார்ட்டிவியானது 3 வருட வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இது ரூ.50,000 விலைப்பிரிவில் வெளியாகி இருக்கிறது. A7H சீரிஸ் ஸ்மார்ட்டிவியானது ரூ.40,000 விலைப்பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

டால்பி அட்மாஸ் ஆதரவு..

டால்பி அட்மாஸ் ஆதரவு..

U7H TV ஆனது Dolby Vision IQ ஆதரவுடன் 4K 120Hz பேனல்களைக் கொண்டிருக்கிறது. ஃபுல் அரே லோக்கல் டிம்மிங், குவாண்டம் டாட் கலர், எச்டிஎம்ஐ 2.1 மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் சமீபத்திய தொழில்நுட்ப டிஸ்ப்ளே மற்றும் ஆடியோ தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் தொழில்நுட்பம்..

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் தொழில்நுட்பம்..

புதிய U7H ஸ்மார்ட் டிவி ஆனது கேமர்களை குறிவைத்து HiSense அறிமுகம் செய்திருக்கிறது. U7H சீரிஸ் 4K TVகள் ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட் விகிதத்துடன் பெரிய டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இது தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) தொழில்நுட்பமும் இந்த ஸ்மார்ட்டிவியில் இடம்பெற்றுள்ளது.

Amazon Fire TV Stick 4K இலவசம்

Amazon Fire TV Stick 4K இலவசம்

U7H TV மற்றும் A7H ஆகிய இரண்டு மாடல்களும் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற ஸ்மார்ட் உதவியாளர்களுக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவைக் கொண்டுள்ளன.

ஹைசென்ஸ் இலவசமாக Amazon Fire TV Stick 4Kஐ வழங்குகிறது. Amazon Fire TV Stick 4K மதிப்பு ரூ.5990 ஆகும். புதிய டிவி சீரிஸ் சமீபத்திய ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

U7H சீரிஸ் விலை..

U7H சீரிஸ் விலை..

HiSense U7H சீரிஸ் டிவியானது அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவி சலுகை விலையில் கிடைக்கிறது.

65 இன்ச் மாடலின் விலை ரூ.71,990 ஆகவும் 55 இன்ச் மாடலின் விலை ரூ.51,990 கிடைக்கிறது.

HDR 10 அம்ச ஆதரவு..

HDR 10 அம்ச ஆதரவு..

ஹைசென்ஸ் 55 இன்ச் ஸ்மார்ட்டிவியானது பவர் பேக் செய்யப்பட்ட 102W JBL 6-ஸ்பீக்கர் அமைப்பை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியானது கூகுள் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இது HDR 10 அம்சத்துடன் Dolby Vision மற்றும் Dolby Atmos ஆதரவைக் கொண்டிருக்கிறது.

டிரேசபிள் டிராக்கர் ஆதரவு..

டிரேசபிள் டிராக்கர் ஆதரவு..

அதேபோல் 55 இன்ச் A7H டொர்னாடோ 2.0 டிவி ஆனது டிரேசபிள் டிராக்கரைக் கொண்ட ரிமோட்டைக் கொண்டுள்ளது.

புதிய 55 இன்ச் டிவியில் உள்ளமைக்கப்பட்ட க்ரோம் காஸ்ட் ஆதரவு இருக்கிறது. Apple AirPlay மற்றும் Apple Home Kit ஆதரவும் இந்த ஸ்மார்ட்டிவியில் உள்ளது.

A7H-சீரிஸ் டிவியின் விலை

A7H-சீரிஸ் டிவியின் விலை

U7H சீரிஸ் ஸ்மார்ட்டிவிகளை போன்றே A7H ஸ்மார்ட் டிவியும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) & வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR) ஆகிய ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

55 இன்ச் A7H-சீரிஸ் டிவியின் விலை ரூ. 42,990 என அமேசான் மற்றும் பிளிப்கார்ட்.காம் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
HiSense Launched New Premium Range Smart TVs in India: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X