Hisense அறிமுகம் செய்த புதிய கூகுள் டிவி: இது இருந்தா வீடே வேற லெவல்- விலை இதோ!
Hisense A6H 4K கூகுள் டிவி சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூகுள் டிவி விற்பனை ஆனது இந்தியாவில் பிரைம் தினம் அன்று தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைசென்ஸ் A6H ஆனது ஏஆர்ஆர், விஆர்ஆர் உடன் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு அம்சங்களின் விவரத்தையும், இந்த டிவியை வாங்கலாமா என்பது குறித்தும் பார்க்கலாம்.

4K கூகுள் டிவி அறிமுகம் செய்த ஹைசென்ஸ்
Hisense இந்தியாவில் A6H சீரிஸ் 4K கூகுள் டிவியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி விற்பனையானது பிரைம் தினத்தன்று தொடங்க இருக்கிறது. பிரைம் தினம் என்றால் என்ன என்ற சந்தேகம் இருக்கிறதா? முதலில் ஸ்மார்ட்டிவி குறித்த தகவலை விரிவாக பார்த்துவிட்டு, அடுத்ததாக பிரைம் தினங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

தொலைதூர வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்துடன் புது ஸ்மார்ட்டிவி
Hisense A6H சீரிஸ் 4K கூகுள் டிவியானது நீங்கள் பார்க்கும் உள்ளடக்கத்துக்கு ஏற்ப கட்டுபடுத்தி காட்சி வெளியீட்டு தன்மை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. Hisense A6H சீரிஸ் ஸ்மார்ட்டிவியானது ரூ.29,990 முதல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வாய்ஸ் மூலம் டிவியை கட்டுப்படுத்துவதற்கு என தொலைதூரக் குரல் கட்டுப்பாடு போன்ற அம்சங்களும் இருக்கிறது.

பிரத்யேகமாக இரண்டு அம்சங்கள்
ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) என்ற கேமிங் அம்சங்களையும் இந்த டிவி கொண்டிருக்கிறது. அதோடு உடனடி ரெஸ்பான்ஸ் மற்றும் ரெஃப்ரஷிங் ரேட் வசதியை வழங்க (VRR) ஆதரவும் இதில் இருக்கிறது.

ரிமோட்டில் உள்ள சிக்கலை தவிர்க்க பிரத்யேக அம்சம்
அதேபோல் ஹைசென்ஸ் ஏ6எச் தொடர் டிவிகளில் ரிமோட் ஃபைண்டர் ஆதரவு இருக்கிறது. இது உங்கள் டிவி ரிமோட் தவறாக செயல்படும் போது கண்டறிய உதவுகிறது. அதாவது தற்போது வரும் பெரும்பாலான ரிமோட்கள் ப்ளூடுத் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே எந்த திசையில் வைத்திருக்கும் போது தெரியாமல் ஏதாவது பட்டனில் நமது கை பட்டாலும் அது உடனே செயல்பட்டு விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்க இது உதவும் என கூறப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் இமேஜிங் அனுபவம்
ப்ரீமியம் டிவிகளில் இருக்கும் பெசல் லெஸ் டிசைன் வடிவமைப்பு இதிலும் இருக்கிறது. அதேபோல் மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் இமேஜிங் அனுபவத்துக்கு என டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு இருக்கிறது. ஹைசென்ஸ் நிறுவனம் இந்த விலைப் பிரிவில் எவ்வளவு ப்ரீமியம் அம்சங்கள் வழங்க முடியுமோ அத்தனை அம்சங்களையும் அதீத வகையில் வழங்கி இருக்கிறது. இதுதொடர்பான தகவலை விரிவாக பார்க்கலாம்.

அலெக்சா ஆதரவோடு கூடிய 4K Smart Laser TV
Hisense சமீபத்தில் இந்தியாவில் 120 இன்ச் 4கே ஸ்மார்ட் லேசர் டிவி- 120L9G மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.4,99,999 ஆகும். இந்த டிவி அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. 4K Smart Laser TV ஆனது வைட் கலர் கேமட், ஸ்மூத் மோஷன் ஃபார் ஸ்போர்ட்ஸ், ஃப்லிம் மேக்கர் மோட், TUV சான்றளிக்கப்பட்ட ப்ளூ லைட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் நீண்ட நேரம் டிவி பார்க்கும் போதும் கண்களின் அசௌகரிய நிலை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் ரிமோட்டை பயன்படுத்தி அலெக்சா ஆதரவை இயக்கலாம்.

ரூ.5 லட்சம் டிவியில் இதெல்லாம் இருந்தால் என்ன ஆச்சரியம்
அதோடு இந்த டிவியானது சுற்றுப்புற ஒளி நிராகரிப்பு (ALR) டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பகல் நேரத்தில் கூட டிவியை சௌகரியமாக எவ்வித தொந்தரவும் இன்றி பார்க்கலாம். சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த டிவியானது விலைக்கேற்ற பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. சரி, இந்த புதுமாடல் ஸ்மார்ட்டிவி குறித்த விஷயத்துக்கு வருவோம்.

திய கூகுள் டிவிக்கு தள்ளுபடி இருக்கிறதா?
தற்போது ஹைசென்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய டிவியானது பிரைம் தினத்தில் விற்பனைக்கு வருகிறது என்று முன்னதாகவே பார்த்தோம். அதாவது பிரைம் தினம் என்பது அமேசான் தள்ளுபடி அறிவிப்பு தினங்கள் ஆகும். அமேசான் பிரைம் டே 2022 விற்பனையில் இந்த கூகுள் டிவி விற்பனைக்கு வருகிறது. இந்த பிரைம் தினமானது ஜூலை 23 மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. இந்த சலுகை விற்பனையானது ஜூலை 24 உடன் முடிவடைகிறது. இந்த தள்ளுபடி தினத்தில் புதிய கூகுள் டிவிக்கு தள்ளுபடி இருக்கிறதா என பார்க்கலாம்.

தள்ளுபடி இருந்தாலும் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது
அமேசான் பிரைம் டே 2022 விற்பனையில் ஹைசென்ஸ் புதிய ஸ்மார்ட்டிவிக்கு அறிமுக சலுகை கிடைக்குமா என்ற தகவல் விரிவாக தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதிலும் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. அமேசான் பிரைம் தினம் ஆனது அனைவருக்குமான சலுகைகள் கிடையாது. பிரைம் உறுப்பினர்களுக்கான பிரத்யேக சலுகையாகும். இதில் ஸ்மார்ட்டிவிக்கு மட்டுமில்லை பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட இருக்கிறது.

உடனே பிரைம் மெம்பர்ஷிப்பை பெற வேண்டும்
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஆடியோ சிஸ்டம்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும். அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் பயனர்களின் ஒரு பெரிய பகுதி எண்ணிக்கை இந்தியாவில் தான் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நீங்கள் பிரைம் உறுப்பினராக இல்லாதபட்சத்தில் இந்த சலுகையை பெற உடனடியாக பிரைம் மெம்பர்ஷிப்பை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications