Home
News

வீட்டுக்குள்ள TV இல்ல.. டிவிகுள்ள தான் வீடே.. 120-இன்ச் Hisense லேசர் TV.. 9.1.4-சேனல் சவுண்ட்.. என்ன விலை?

ஹைசென்ஸ் (Hisense) நிறுவனம் 92-இன்ச் முதல் 120-இன்ச் வரையிலான வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளை கொண்ட 2 புதிய லேசர் டிவிகளை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது: அவைகள் ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 (Discovery X1) மற்றும் ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 அல்ட்ரா (Discovery X1 Ultra) மாடல்கள் ஆகும்

இந்த 2 மாடல்களும் சிஇஎஸ் 2025 (CES 2025) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட எல்9க்யூ ட்ரைகுரோமா லேசர் ப்ரொஜெக்டரை அடிப்படையாக கொண்டவை. ஹைசென்ஸ் லேசர் டிவி டிஸ்கவரி எக்ஸ்1 மாடல் ஆனது 92-இன்ச் மற்றும் 100-இன்ச் அளவுகளில் வருகிறது. இது MCL39 லேசர் லைட் சோர்ஸ்-ஐ பயன்படுத்துகிறது. மேலும் இது 600 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது.

120-இன்ச் Hisense லேசர் TV..  9.1.4-சேனல் சவுண்ட்.. என்ன விலை?

கூடவே 110 சதவீத 4K DLP ப்ரொஜெக்டர் BT.2020 கலர் ஸ்பேஸ்-ஐ ஆதரிக்கிறது மற்றும் IMAX என்ஹான்ஸ்டு மற்றும் பிலிம் மேக்கர் மோட்-ஐ கொண்டுள்ளது. கடைசியாக இது டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட பில்ட் இன் 7.1.2-சேனல் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டமையும் கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள டிஸ்கவரி எக்ஸ்1 அல்ட்ரா மாடல் ஆனது 100-இன்ச் மற்றும் 120-இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் சீனாவில் 139-இன்ச் மற்றும் 150-இன்ச் மாடல்களை சேர்க்க ஹைசென்ஸ் திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்1அல்ட்ரா மாடலும் கூட அதே MCL39 லேசர் சோர்ஸ்-ஐ பயன்படுத்துகிறது, ஆனால் இது 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகிறது. கூடவே இது மேம்படுத்தப்பட்ட 9.1.4-சேனல் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டமையும், டால்பி அட்மோஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. இது எக்ஸ்1 மாடலில் உள்ள அதே அம்சங்களை தான் இதுவும் கொண்டுள்ளது

ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 மற்றும் ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 அல்ட்ரா லேசர் டிவிக்களின் விலை விவரங்கள்: சீனாவில் ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 லேசர் டிவி மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,62,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹைசென்ஸ் டிஸ்கவரி எக்ஸ்1 அல்ட்ரா லேசர் டிவி மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.5,96,210 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹைசென்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன தான். ஆனால் 100 இன்ச், 120 இன்ச் மாடல்கள் இந்திய சந்தைக்கு வருவதில்லை .

ஒருவேளை இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளை நீங்கள் தேடினால் சோனி (SONY) நிறுவனம் தனது புதிய பிராவியா 2 II சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளை (Bravia 2 II series Smart TVs) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல வகையான ஸ்க்ரீன் அளவுகளில் (Screen Sizes) வரும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே ரெசல்யூஷன் (4K Resolution), மேம்படுத்தப்பட்ட ஆடியோ (Enhanced audio) மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை (Smart features) வழங்குகிறது.

இந்த டிவிகள் 43-இன்ச் (43 inch), 50-இன்ச் (50 inch), 55-இன்ச் (55 inch), 65-இன்ச் (65 inch) மற்றும் 75-இன்ச் (75 inch) விருப்பங்களில் கிடைக்கின்றன. அனைத்து மாடல்களும் சோனி எக்ஸ்1 பிக்சர் ப்ராசஸரில் (Sony X1 Picture Processor) இயங்குகின்றன. இது நாய்ஸ்-ஐ குறைக்கவும் டீடெயில்களை ஷார்ப் செய்யவும் மேம்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது.

சோனி பிராவியா 2 II சீரீஸ் ஸ்மார்ட் டிவி விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
K-75S25M2 (75-இன்ச்) - ரூ.1,45,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-65S25M2 (65-இன்ச்) - ரூ. 97,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-55S25M2 (55-இன்ச்) - ரூ. 75,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-43S25M2 (43-இன்ச்) - ரூ. 50,990- இப்போது வாங்க கிடைக்கிறது
மீதமுள்ள மாடல்களின் விலை மற்றும் விற்பனை தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense Launched 92 inch 100 inch 120 inch Discovery X1 Series Laser TV in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X