Home
News

வீட்டுக்குள்ள தியேட்டர் இல்ல.. ஸ்டேடியம்! Spilt Screen ஆதரவு உடன் 163-இன்ச் TV அறிமுகம்.. என்ன விலை தெரியுமா?

சிஇஎஸ் 2025 (CES 2025) நிகழ்வில் காட்சிப்படுத்திய பிறகு ஹைசென்ஸ் நிறுவனம் அதன் 163 இன்ச் யுஎக்ஸ் மைக்ரோஎல்இடி டிவிக்கான ப்ரீ ஆர்டர்களை, சீனாவில் தொடங்கியுள்ளது. ஹைசென்ஸ் நிறுவனத்தின் இந்த டிவியில் மிகப்பெரிய ஸ்க்ரீன் சசி இருக்கும் போதிலும் கூட, இது 24 மிமீ தடிமன் கொண்ட ஒரு பார்டர்லெஸ் டிசைனை கொண்டுள்ளது. இதுதான் மிகவும் ஸ்லிம் ஆன மைக்ரோ எல்இடி டிவி என்றும் ஹைசென்ஸ் கூறுகிறது.

ஹைசென்ஸ் 163 இன்ச் யுஎக்ஸ் மைக்ரோஎல்இடி டிவியின் முக்கிய அம்சங்கள்: 10000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்-ஐ கொண்ட டிஸ்பிளேவை அடைய 24.88 மில்லியன் மைக்ரோஎல்இடி கிரிஸ்டல் கோர்களை ஹைசென்ஸ் பயன்படுத்தி உள்ளது. இது வழக்கமான ஓஎல்இடி திறன்களை விட அதிகமாகும். மேலும் இது ஸ்க்ரீன் பரன்-இன் அபாயத்தைக்யும் குறைக்கிறது. இது 3840ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.

Spilt Screen ஆதரவு உடன் 163-இன்ச் TV அறிமுகம்.. என்ன விலை?

98% டிசிஐ-பி3 கலர் கேமட் உடன் வரும் இந்த டிவியின் டிஸ்பிளேவானது டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) மற்றும் எச்டிஆர் ஃபார்மெட்களையும் உள்ளடக்கியது. கேமிங் அம்சங்களை பொறுத்தவரை இந்த டிவி எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள் (4K@120Hz), விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎம்டி ப்ரீசின்க (AMD FreeSync) பிரீமியம் ப்ரோ ஆகியவைகளை கொண்டுள்ளது.

இந்த யுஏக்எஸ் மைக்ரோ எல்இடி டிவியில் ஒரே நேரத்தில் ஒளி மற்றும் வண்ண கட்டுப்பாட்டிற்கான டூயல்-கோர் கட்டமைப்பும் உள்ளது. டிவியில் உள்ள பிற அம்சங்களை பொறுத்தவரை இது டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) உடன் கூடிய டேவியலட் 6.2.2-சேனல் சவுண்ட் சிஸ்டம் , அத்துடன் ஸ்பிளிட்-ஸ்கிரீன் வியூ மற்றும் ஆடியோ ஆகியவைகளையும் கொண்டுள்ளது

ஹைசென்ஸ் 163 இன்ச் யுஎக்ஸ் மைக்ரோஎல்இடி டிவியின் விலை விவரங்கள்: சீனாவில் 799,999 யுவான் என்கிற விலைக்கு, அதாவது அமெரிக்க டாலர் மதிப்பின்படின் ~$110,372 க்கும், அதுவே இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.9,450,541 (கிட்டத்தட்ட ரூ.9.5 லட்சம்) ஆகும். இந்த டிவி, சீனாவை தவிர்த்து மற்ற சந்தைகளுக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேபோல சமீபத்தில் வெளியான மிகவும் வித்தியாசமான தயாரிப்பை பொறுத்தவரை, டபுள்யூஐபிஓ (WIPO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் (World Intellectual Property Organization) ஒப்போ நிறுவனம் அதன் ஃபோல்டபிள் டேப்லெட்டிற்கான (Foldable Tablet) காப்புரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்போவின் இந்த மடிக்கக்கூடிய டேப்லெட்டை பற்றி தகவல் வெளியாவது இதுவே முதல் முறையாகும். ஆனால் கடந்த காலங்களில் வெளியான சில அறிக்கைகள் - ஆப்பிள் நிறுவனம் தான் ஒரு மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்குவதாக கூறின. ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் ஃபோல்டபிள் ஐபோனையே இன்னும் தயார் செய்யவில்லை. ஆக ஃபோல்டபிள் டேப்லெட் விஷயத்தில் ஒப்போ முந்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒப்போ ஃபோல்டபிள் டேப்லெட் காப்புரிமை பற்றிய விவரங்கள்: இந்த காப்புரிமை ஜூன் 2022 இல் ஒப்போ நிறுவனத்தால் செய்யப்பட்டது. இதை டபுள்யூஐபிஓ ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று பதிவு செய்துள்ளது. விண்ணப்பத்தில் காப்புரிமைதாரரின் பெயர் மற்றும் முகவரி - ஒப்போ, சீனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்போவின் இந்த காப்புரிமையை தாக்கலில் - ஒப்போ உருவாக்கும் ஃபோல்டபிள் டேப்லெட்டின் அனைத்து கோணங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான வடிவமைப்பு திட்டங்கள் உள்ளன. மேலோட்டமாக பார்க்க ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது - ஒரு பெரிய ஸ்க்ரீனை கொண்ட சாதாரணமான டேப்லெட்டை போலவே தெரிகிறது. ஆனால் அதை புக்-ஸ்டைலில் மடிக்க முடியும்.

மேலும் ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை காட்சிப்படுத்துகிறது மற்றும் பின்புறத்தில் சிங்கிள் சர்குலர் கேமரா சென்சாருடன் காணப்படுகிறது. இந்த டேப்லெட்டின் இடதுபக்க ஃபிரேம் வெறுமையாகவே உள்ளது, அதே நேரத்தில் வலதுபக்க விளிம்பில் ஒரு பவர் பட்டன் மற்றும் நடுவில் ஒரு யூஎஸ்பி-C போர்ட் (டேப்லெட்டை மடிக்கும் இடத்தில்) மற்றும் வால்யூம் ராக்கர் பட்டன்கள் ஆகியவைகள் உள்ளன. Photo Courtesy: Hisense / https://www.microled-info.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Hisense 163 inch UX MicroLED TV With Split Screen Support All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X