Home
News

Jio பயனர்கள் அதிகம் விரும்பி ரீசார்ஜ் செய்வது இந்த திட்டங்களையா? ஓ..ஓஹோ.. இதான் காரணமா?

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களால் அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட குறைந்த விலை பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Low Price Best Recharge Plans) இந்த பதிவுடன் இணைத்துள்ளோம். இந்த திட்டங்கள் அனைத்தும் ரூ.300 விலைக்குள் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை உடன் கூடுதல் நன்மைகளை வழங்கும் திட்டங்களாகத் திகழ்கின்றன.

இந்த பட்டியலில் உள்ள பெஸ்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். வாங்க. இந்த திட்டங்களுடன் கிடைக்கும் பெஸ்ட் இலவச நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. ரூ. 300 விலைக்குள் மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்த டெய்லி டேட்டா திட்டங்கள் இவை தானா? உங்கள் பட்ஜெட்டிற்கு எந்த பாதிப்பும் வராமல், உங்கள் பாக்கெட்டில் ஓட்டை விழாமல் மிகவும் சிக்கனமாகத் தினமும் 1ஜிபி டேட்டா வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயம் இந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பார்க்க வேண்டும்.

Jio பயனர்கள் அதிகம் விரும்பி ரீசார்ஜ் செய்வது இந்த திட்டங்களையா?

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ஏறக்குறைய உங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான டேட்டா நன்மை, வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS நன்மையை வழங்குகிறது. நமது பட்டியலில் 3 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை ரூ. 200 முதல் ரூ.300 விலை வரம்பிற்குள் அமைந்துள்ளது. இதன் நன்மை மற்றும் விலை பற்றிய விபரங்களை பார்க்கலாம் வாங்க.

ஜியோ ரூ. 209 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் போல் இல்லாமல், 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவின் மற்ற திட்டங்கள் 20 நாள் மற்றும் 24 நாள் வேலிடிட்டி உடன் வந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது. இதுவும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds போன்ற இலவச நன்மைகளுடன் வருகிறது.

ஜியோ ரூ. 299 திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வெறும் 299 ரூபாய் விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதல் இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

Jio பயனர்கள் அதிகம் விரும்பி ரீசார்ஜ் செய்வது இந்த திட்டங்களையா?

ஜியோ ரூ. 296 திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி டேட்டாவை வழங்காது ஆனால், ஒட்டுமொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ஒரு முழு மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இந்த திட்டம் 30 நாள் நீடிக்கும் முழுமையான 1 மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

இந்த 3 திட்டங்களும் உங்களுக்கு தேவையான நன்மைகளை வழங்குகிறது. இதில் எந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Highly Recharged Jio Prepaid Plans Under Rs 300
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X