2 வருசமா 9 வயது சிறுவனை அடிச்சுக்க ஆளே இல்ல: 2020 இல் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் சேனல்!
உலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது பல்வேறு மக்கள் அதிகளவு யூடியூப் சேனல்களை தான் பார்க்கின்றனர், குறிப்பாக சமையல் டிப்ஸ் முதல் விளையாட்டு வரை அனைத்து வீடியோக்களும் இந்த யூடியூபில் வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

தவிர்க்க முடியாத யூடியூப் தளம்
நம்மில் பெரும்பாலோர் யூடியூப் தளத்தை அவர்-அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் தினசரி இந்த வீடியோ சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அடிப்படையில் இதைப் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும் கூட, யூடியூப் தளத்தில் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான பயனுள்ள தகவல்களும் உள்ளது.

யூடியூப் சேனல் மூலம் வருமானம்
யூடியூப் வீடியோ சேனல் ஆரம்பித்து வீடியோ அப்லோட் செய்யும்போது வீடியோக்கள் பார்க்கப்படும் எண்ணிக்கை பொருத்து குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதை பலரும் தொழிலாக சேனல் ஆரம்பித்து தனித்துவ வீடியோக்களை பதிவிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள யூடியூப் நட்சத்திர பட்டியல்
2020 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் நட்சத்திரங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இது கடந்த ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2020 ஆம் ஆண்டு வரையிலான வருமானத்தை மதிப்பிட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

9 வயது சிறுவர் டாப்
அதன்படி யூடியூப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்யும் 9 வயது சிறுவர் யூடியூப் ஆண்டு வருமானத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். இதன்படி ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள முழுவிவரங்களை பார்க்கலாம்.

ரியான் காஜி: 29.5 மில்லியன் டாலர்கள் வருமானம்
ஒன்பது வயதான ரியான் காஜி, ஃபோர்ப்ஸின் 2020 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய யூடியூப் நட்சிதரமாக உள்ளார். இவரது யூடியூப் சேனலுக்கு 41.7 மில்லியன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். ஜூன் 2019 முதல் ஜூன் 2020 வரையிலான வருமானத்தின்படி இவர் 29.5 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளார். இவருக்கு 12.2 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு சராசரியாக 217 கோடி ரூபாய் ஆகும்.

கடந்தாண்டும் ரியான் காஜி முதலிடம்
ரியான் காஜி தனது சேனலில் பொம்மைகள் விளையாடி காண்பித்து ரிவ்யூ செய்து வருகிறார். இதன் மூலம் மில்லியன் பார்வைகளை தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார். மேலும் ஒன்பது வயது ஆன ரியான் காஜி முதலிடம் பிடிப்பது இது முதன்முறையல்ல. 2019ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் வெளியீட்டிலும் இவர் முதலிடம் பிடித்தார்.

மிஸ்டர் பீஸ்ட் (ஜிம்மி டொனால்ட்சன்)
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 47.8 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட இந்த சேனல் 24 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.177 கோடி ஆகும்.

டியூட் பெர்பெக்ட்
57.5 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட ஃபைவ் மேன் சேனல் டியூட் பெர்பெக்ட் 23 மில்லியன் டாலர்கள் வருமான் ஈட்டியுள்ளது. இதில் 2.77 பில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.169 கோடி ஆகும்.

ரெட் அன்ட் லிங்க்
ரெட் ஜேம்ஸ் மெக்கலின் மற்றும் சார்லஸ் லிங்கன் நீண்டகாலமாகவே யூடியூப் நட்சத்திரமாக உள்ளனர். இவர் ஃபோர்ப்ஸ் ஆண்டு கணக்கீட்டின்படி 20 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.147 கோடி ஆகும்.

மார்க்கிபிளையர்
அதேபோல் மார்க்கிபிளையர் என்ற சேனல் மூலம் மார்க் எட்வேர்டு பிஸ்ச்பேச் 2012 ஆம் ஆண்டு முதல் சிறந்த வீடியோ கேம் மதிப்பீட்டாளராக உள்ளார். இவர் சுமார் 19.5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.144 கோடியாகும்.
source: forbes.com


Click it and Unblock the Notifications