யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியல்: அசத்திய சுட்டிகள்.!

|

இப்போது பல்வேறு மக்கள் அதிகளவு யூடியூப் சேனல்களை தான் பார்க்கின்றனர், குறிப்பாக சமையல் டிப்ஸ் முதல் விளையாட்டு வரை அனைத்து வீடியோக்களும் இந்த யூடியூபில் வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதன்படி ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஜீன் 1, 2008 முதல் ஜீன் 1, 2019 வரை யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்த்த சுட்டிககள் இடம்பெற்றுள்ளனர்.

ரியான்ஸ் வேர்ல்ட்

ரியான்ஸ் வேர்ல்ட்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின் படி ரியான்ஸ் வேர்ல்ட் (ryans world) என்ற யூடியூப் சேனலுக்கு சொந்தக்காரரான 8வயது சுட்டிப் பையன்தான் 26மில்லியன் டாலர் சம்பளத்தோடு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இந்த சுட்டிப் பையன் சென்ற வருடமும் 22மில்லியனோடு இவர்தான் முதல இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1.9 பில்லியன்

1.9 பில்லியன்

பின்பு கடந்த நவம்பர் மாதம் இவர் சேனலில் வெளியிடப்பட்ட `Huge eggs surprise toys challenge' என்றவீடியோ 1.9 பில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டு யூடியூபில் அதிகம் பேர்களால் பார்க்கப்பட்ட டாப் 50 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

டிஆர்டிஓ: பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை: வெற்றி.!டிஆர்டிஓ: பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை: வெற்றி.!

வீடியோவில்

இந்நிலையில், வீடியோவில் காண்பிக்கப்படும் பொம்மைகளின் விமர்சனத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையை அளித்துள்ளது. ஆனால் விமர்சன வீடியோவில் ஸ்பான்சர் செய்யப்பட்டதா என சேனல் தெளிவாக குறிப்பிடாதால், நுகர்வோர் அமைப்பான ட்ரூத் இன்
அட்வர்டைசிங், அமெரிக்கா பெடரல் டிரேட் கமிஷனுக்கு புகார் அளித்தது. அதன் பின்னர் சேனர் பெயர் மாற்றப்பட்டு,'ரியான் ஏஜஸ்' என்ற சேனல் வழியாக உயர் கல்விக்கான வீடியோக்களை வழங்குகிறது.

5வயது சுட்டிப் பெண்

5வயது சுட்டிப் பெண்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இதே பட்டியலில் 3-ஆம் இடத்தை பிடித்தது அனஸ்டாஸியா (Anastasia Radzinskaya) என்கிற 5வயது சுட்டிப் பெண். இவரின் சேனலை 103மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறார்கள். உலகிலேயே பெரிய குழந்தைகளுக்கான சேனல் என்ற பெருமையும் இவருடைய சேனலான லைக் நேஸ்ட்யாவுக்கு உண்டு யூடியூப் வீடியோஸ் மூலம் இவர் சம்பாதித்து 18மில்லியன் டாலர்கள்.

17மில்லியன் டாலர்கள்

17மில்லியன் டாலர்கள்

அதன்பின்னர் Dude Perfect, Rhett and Link மற்றும் Jefree Star போன்ற சேனல்கள் முறையே 2,4 மற்றும் 5-ஆம் இடங்களை பிடித்துள்ளன. இவர்களுடைய வருமானங்கள் முறையே 20மில்லியன் 17.5மில்லியன் மற்றும் 17மில்லியன் டாலர்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Highest Paid Youtubers List 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X