இந்தியாவில் கிடைக்கும் அதிவேக இண்டர்நெட் திட்டடங்களின் பட்டியல்.!

By Meganathan
|

மற்ற நாடுகளைப் போல் இந்தியாவில் இண்டர்நெட் வேகம் அதிவேகமாகக் கிடைப்பதில்லை என்றாலும் வரும் காலங்களில் இந்த நிலை முற்றிலும் மாறும் என்பது உறுதி. ஓரளவு வேகம் இருக்கும் போதே இந்தியா மற்ற நாடுகளுடன் மெல்லப் போட்டிப் போட துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிவேக இண்டர்நெட் மற்றும் சிறப்பான இண்டர்நெட் திட்டங்களை வழங்குவதில் மற்ற நாடுகள் முன்னணியில் இருந்தாலும் இந்தியாவும் இந்தப் பாதையில் நுழைந்து வருகின்றது. பல்வேறு இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் சீரான வேகம் கொண்ட இண்டர்நெட் சேவைகளை நல்ல விலையில் வழங்கத் துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவில் கிடைப்பதில் தலைசிறந்த மற்றும் அதிவேகமான இண்டர்நெட் திட்டங்களை பற்றிய விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆக்ட்

ஆக்ட்

ஆக்ட் ஃபைபர்நெட் இந்தியாவின் முன்னணி இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது. ஆக்ட் இண்டர்நெட் குறைந்த விலையில் சிறப்பான சேவையை வழங்கியும் வருகின்றது. இந்நிறுவனம் ரூ.1,999 விலையில் நொடிக்கு சுமார் 100 எம்பி வேகம் கொண்ட சேவைகளை வழங்குகின்றன.

ஏர்டெல் பிராட்பேண்ட்

ஏர்டெல் பிராட்பேண்ட்

ஆக்ட் ஃபைபர்நெட்டிற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் இருக்கின்றது. ரூ.2,399 செலுத்தும் போது அதிகபட்சம் நொடிக்கு 40 எம்பி என்ற வேகம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஆனாலும் மற்ற திட்டங்களில் வேகம் நொடிக்கு 1 எம்பி வரை வழங்கப்படுகின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யு பிராட்பேண்ட்

யு பிராட்பேண்ட்

பெயர் புதியதாக இருந்தாலும் நாட்டில் மற்ற நிறுவனங்களுக்கு இணையான வேகத்தில் இணையச் சேவைகளை யு பிராட்பேண்ட் வழங்குகின்றது. ரூ.1,724 செலுத்தும் போது நொடிக்கு 100 எம்பி என்ற வேகத்தில் இண்டர்நெட் பெற முடியும்.

டிக்கோணா

டிக்கோணா

இந்தியாவில் வளர்ந்து வரும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக டிக்கோணா இருக்கின்றது. இந்நிறுவனத்தின் இண்டர்நெட் வேகமானது நொடிக்கு 2 எம்பி முதல் 4 எம்பி வரை வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக ரூ.950 செலுத்தும் போது 80 ஜிபி வரை பெற முடியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ வரவிற்குப் பின் டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. அந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. இருந்தும் மற்ற நிறுவனங்களை விடச் சற்றே அதிகமான விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

ரிலையன்ஸ் பிராட்பேண்ட்

ரிலையன்ஸ் பிராட்பேண்ட்

ரிலையன்ஸ் ஜிகாஃபைபர் என நினைக்க வேண்டாம். இது ரிலையன்ஸ் பிராட்பேண்ட் சேவையாகும். அதிகபட்சம் நொடிக்கு 12 எம்பி வேகம் கொண்ட இண்டர்நெட் வழங்குகின்றது. இதற்கு மாதம் ரூ.999 என்ற கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எம்டிஎன்எல் பிராட்பேண்ட்

எம்டிஎன்எல் பிராட்பேண்ட்

இந்நிறுவனம் நொடிக்கு 100 எம்பி என்ற வேகத்தினை ரூ.6,999 என்ற விலைக்கு வழங்குகின்றது. இதுவும் மற்ற நிறுவனங்களை விட அதிகம் ஆகும்.

ஏர்லின்க் டிசையர்இகோ

ஏர்லின்க் டிசையர்இகோ

இந்தத் திட்டம் அதிவேக இண்டர்நெட் வழங்காத நிலையிலும் விலை குறைவு என்பதால் இங்கு இடம் பிடித்துள்ளது. ஆண்டிற்கு ரூ.2400 செலுத்தும் போது நொடிக்கு 200 கேபி என்ற வேகம் வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
High-Speed Internet Packs Available in India Right Now Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X