அலெர்ட்! பிரபல ஆப்பில் வீடியோ கால் செய்யும் பயனர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை!

|

மிகவும் பிரபலமான ஒரு வீடியோ கால் ஆப்பை (Video Call App) பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு, இந்திய அரசாங்கம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அது என்ன ஆப்? இந்திய அரசாங்கமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கும்படி அப்படி என்ன நடந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை!

புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை!

இந்திய அரசாங்கத்தின் இந்த சமீபத்திய எச்சரிக்கை ஆனது இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீமில் (Indian Computer Emergency Response Team; CERT-IN) இருந்து வந்துள்ளது,

ஆக இதை புறக்கணிப்பதற்கு பின்னால் உள்ள ஆபத்துகளையும், சிக்கல்களையும் உங்களில் சிலர் நன்கு அறிந்து இருக்கலாம்!

Netflix-இன் புதிய அறிவிப்பு.. நவம்பர் 3 முதல் Netflix-இன் புதிய அறிவிப்பு.. நவம்பர் 3 முதல் "இதுக்கு" தயார் ஆகிக்கோங்க!

CERT-IN பற்றி தெரியாதா?

CERT-IN பற்றி தெரியாதா?

அறியாதோர்களுக்கு CERT-IN ஆனது இன்டர்நெட் செக்யூரிட்டி தொடர்பான அச்சுறுத்தல்களை கையாளும் ஒரு "நோடல் ஏஜென்சி" ஆகும்.

இது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஆபத்தை விளைவிக்கும் அந்த வீடியோ கால் ஆப் எது?

ஆபத்தை விளைவிக்கும் அந்த வீடியோ கால் ஆப் எது?

இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதும், நாம் இங்கே பேசுவதும் - பிரபல வீடியோ கான்பரன்சிங் ஆப் ஆன ஜூம்-ஐ (Zoom App) பற்றி தான்!

வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக Zoom வீடியோ கான்பரன்சிங் தளத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அலெர்ட் ஆகி கொள்ளவும்!

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

ஏனென்றால்?

ஏனென்றால்?

இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆனது, ஜூம் ஆப் தொடர்பாக ஒரு உயர் தீவிர எச்சரிக்கையை (High-Severity Warning) வெளியிட்டுள்ளது.

CERT-IN கூற்றுப்படி, சில குறிப்பிட்ட ஜூம் ஆப் வெர்ஷன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.

எந்தெந்த வெர்ஷன்களில் சிக்கல் உள்ளது?

எந்தெந்த வெர்ஷன்களில் சிக்கல் உள்ளது?

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வெர்ஷன் 4.8.20220916.131 மற்றும் அதற்கு முன் இயங்கும் ஜூம் ஆன்-பிரைமிஸ் மீட்டிங் கனெக்டர் MMR-இல் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்பட்டுள்ளது!

மேலும், 5.10.6 இலிருந்து தொடங்கி 5.12.0 க்கு முந்தைய மேக்ஓஎஸ்-க்கான (ஸ்டாண்டர்ட்மற்றும் ஐடி அட்மின்) ஜூம் க்ளையண்ட்டில் கூட பாதுகாப்பு சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

இப்போது ஜூம் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

இப்போது ஜூம் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட ஜூம் ஆப் வெர்ஷன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், லேட்டஸ்ட் ஜூம் ஆப் வெர்ஷனுக்கு உடனடியாக அப்டேட் ஆக வேண்டும்.

இல்லை என்றால், உங்களிடம் ஆடியோ மற்றும் வீடியோ மீட்டிங் ஹேக் செய்யப்படும் அபாயம் ஏற்படலாம் என்று செர்ட்-இன் எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஜூம் ஆப்பை அப்டேட் செய்வது எப்படி?

ஜூம் ஆப்பை அப்டேட் செய்வது எப்படி?

- லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆக, முதலில் நீங்கள் ஜூம் டெஸ்க்டாப் ஆப்பை திறக்க வேண்டும்.

- பின்னர் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவை திறந்து ஜூம் ஃபோல்டர் வரும் வரை ஸ்க்ரோல் செய்யவும்.

- அதன் பிறகு, சேர்ச்-க்கு (Search) அருகில், மேல் வலது மூலையில் அணுக கிடைக்கும் டிராப்-டவுன் மெனுவிலிருந்து ப்ரொஃபைல் (Profile) ஓபன் செய்யவும்.

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- Profile-இல் ஏதேனும் அப்டேட் கிடைக்கிறதா என்று தேடவும். நீங்கள் பழைய வெர்ஷனை பயன்படுத்தினால், உங்களுக்கான அப்டேட் இருந்தால், அதை இன்ஸ்டால் செய்யச்சொல்லும் ஆன்-ஸ்க்ரீன் ப்ராம்ப்ட் உங்களுக்கு கிடைக்கும்.

- அதை கிளிக் செய்து லேட்டஸ்ட் ஜூம் ஆப் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகிகொள்ளவும்; அவ்வளவு தான்! ஜூம் ஆப் வழியாக நீங்கள் நிகழ்த்தும் மீட்டிங்ஸ் அனைத்தும் "வழக்கம் போல" மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்!

Best Mobiles in India

English summary
High Severity Warning From Indian Government to Update Your Zoom App Immediately

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X