வாட்ஸ்ஆப் ட்ரிக்ஸ் - இது அனைவருக்கும் தெரியனும்..!

Posted By:

எதுவும் முழுமையாக கற்றோர் இல்லை எனலாம், சிறிய விஷயமானாலும் அவைகளில் தெரியாத அம்சங்கள் ஒன்றேனும் இருக்க தான் செய்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

வாட்ஸ்ஆப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆர்ச்சிவ் சாட்

ஆர்ச்சிவ் சாட்

இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனினை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

ம்யூட் க்ரூப் சாட்

ம்யூட் க்ரூப் சாட்

சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் மெனு பட்டனை க்ளிக் செய்து ம்யூட் பட்டனை தேர்வு செய்து ம்யூட் செய்ய வேண்டிய க்ரூப் பெயரை க்ளிக் செய்யலாம்.

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

நீங்கள் கடைசியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ்ஆப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- ப்ரைவஸி -- லாஸ்ட் சீன் ஆப்ஷனை க்ளிக் செய்து நோபடி என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும். ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.

ஆட்டோ டவுன்லோடிங்

ஆட்டோ டவுன்லோடிங்

வாட்ஸ்ஆப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க செட்டிங்ஸ் -- சாட் செட்டிங்ஸ் -- மீடியா ஆட்டோ டவுன்லோடு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும், ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.

பேக்கப்

பேக்கப்

வாட்ஸஆப் சாட்களை பேக்கப் செய்ய செட்டிங்ஸ் -- சாட் செட்டிங்ஸ் -- பேக்கப் கான்வர்சேஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

லாக் வாட்ஸ்ஆப்

லாக் வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் தகவல்களை பாதுகாப்பாக வைக்க சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டு வாட்ஸ்ஆப் செயலியை லாக் செய்து கொள்ளலாம்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

வாட்ஸ் புகைப்படங்களை கேலரி அல்லது கேமரா ரோலில் வைத்து கொள்வது சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவ்வாறானவர்கள் புகைப்படங்களை வாட்ஸ்ஆப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.

போன் நம்பர்

போன் நம்பர்

சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ்ஆப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக செட்டிங்ஸ் -- அக்கவுன்டு -- சேன்ஜ் நம்பர் ஆப்ஷனில் புதிய நம்பரை என்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
check out here Hidden WhatsApp Tricks That Every User Needs To Know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்