Home
News

பயனுள்ள ஜிமெயில் சேவைகள் - இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா

உலகம் முழுவதிலும் அலுவலக ரீதியான தொலைதொடர்புகளை மேற்கொள்ள உதவும் இணை சேவையான ஜிமெயில் மக்களுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றது.

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

இலவச சேவையான ஜிமெயிலில் உங்களுக்கு தெரிந்திராத பல அம்சங்கள் இருக்கின்றது. அதிகளவு மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துபவர்கள் சில பணிகளை வேகமாக செய்து முடிக்க உதவும் சில தந்திரங்களை பாருங்கள்..

அன்டூ

அன்டூ

மின்னஞ்சல் அனுப்பிய சில நொடிகளில் அதனை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அன்டூ பட்டனை க்ளிக் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் அனுப்பப்பட மாட்டாது.

கஸ்டம் கீபோர்டு

கஸ்டம் கீபோர்டு

கீபோர்டு ஷார்ட்கட் மூலம் ஜிமெயில் பயன்படுத்த ஜிமெய்ல் லேப்ஸ் அம்சங்கள் வழி வகுக்கின்றது.

கூடுதல் சேவைகள்

கூடுதல் சேவைகள்

குறிப்பிட்ட சில சேவைகளில் இருந்து வீடியோக்கள், டாக்குமென்ட்கள், வாய்ஸ்மெயில் மற்றும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டிருந்தால் அவைகளை ஜிமெயிலில் பார்க்க முடியும். இதனை ஜிமெயில் லேப்ஸ் பகுதியில் காண முடியும்.

ஆட்டோ அட்வான்ஸ்

ஆட்டோ அட்வான்ஸ்

பல மின்னஞ்சல்களை ஒரே சமயத்தில் கையாளும் போது ஆட்டோ அட்வான்ஸ் சேவையை பயன்படுத்தலாம், இதன் மூலம் உங்களுக்கு நேரம் மிச்சமாகும்.

அன்ரெட்

அன்ரெட்

ஜிமெயிலில் எத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் இருக்கின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள ஜிமெயில் லேப்ஸில் இருக்கும் அன்ரீடு மெசேஜ் ஐகான் வழிவகுக்கின்றது.

சென்டு ஆன்டு ஆர்ச்சிவ்

சென்டு ஆன்டு ஆர்ச்சிவ்

ஜிமெயில் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று "Show "Send & Archive" க்ளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கான பதில்கள் அனைத்தும் தனியாகவே தெரியும்.

ஆப்ஸ் சர்ச்

ஆப்ஸ் சர்ச்

ஒரு வேலை கூகுள் டாக்ஸ் அல்லது கூகுள் சைட்ஸ் போன்ற செயலிகளை பயன்படுத்தும் போது சர்ச் செய்தால் உங்களின் தேடல்கள் டாக்ஸ் மற்றும் சைட்ஸ் என இரண்டிலும் மேற்கொள்ளப்படும்.

ரிப்ளை ஆல்

ரிப்ளை ஆல்

சில சமயங்களில் பலர் கலந்திருக்கும் மின்னஞ்சலில் ஒருவர் ரிப்ளை பட்டன் மூலம் ஒருவருக்கும் மட்டும் பதில் அளிக்கும் நிலமை நேரிடும், இதை தவிர்க்க ரிப்ளை ஆல் பட்டனை பயன்படுத்தலாம். இதன் மூலம் குறிப்பிட்ட தகவல் அனைவருக்கும் சேர்க்கப்படும்.

கேன்டு ரெஸ்பான்ஸ்

கேன்டு ரெஸ்பான்ஸ்

சில சமயங்களில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை டைப் செய்ய நேரிடலாம், ஒவ்வொரு முறையும் டைப் செய்வதற்கு பதிலாக ஜிமெயில் லேப்ஸ் பகுதியில் இருக்கும் கேன்டு ரெஸ்பான்சஸ் ஆப்ஷனை பயன்படுத்தி ஒரு முறை டைப் செய்த தகவலினை எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

க்விக் லின்க்ஸ்

க்விக் லின்க்ஸ்

ஸ்டார்டு மெசேஜஸ், மல்டிப்பில் இன்பாக்ஸ் போன்று க்விக் லின்க்ஸ் பட்டனும் அதிக பயனுள்ளதாக இருக்கின்றது. இதன் மூலம் எவ்வித சேவையையும் எளிதாக கையாள முடியும்.

Best Mobiles in India

English summary
check out here the 'hidden' Gmail features you can try. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X