ட்ரூகாலர் மறைக்கப்பட்ட அம்சங்கள்.!!

By Aruna Saravanan
|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது தேவையில்லாத போன் கால்களின் தொல்லையால் அவதி பட்டிருக்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கும். சிலர் சீரியஸாக செய்தால் சில விளையாட்டுக்காக உங்களிடம் கண்ணாம் பூச்சி காட்டி இருப்பார்கள்.

இனி அது நடக்காது. ட்ரூகாலர் உங்களுக்கு உதவி புரியும். இதன் உதவியுடன் யார் போன் செய்கின்றார்கள், என்பதை அறிந்து கொள்வதுடன் தேவையில்லாத எண்களை பிளாக் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த செயலியை பற்றி இங்கு காண்போம்.

பிளாக்

பிளாக்

ஒரு சில எண்களுடன் தொடங்கும் கால்களை பிளாக் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது. யாராவது உங்களை அடிக்கடி போனில் தொல்லை செய்தால், உடனே அந்த டிஜிட் எண்ணை பிளாக் செய்து விடுங்கள்.

யார்

யார்

இந்த செயலி வேலை செய்ய உங்கள் போனில் நெட் பயன்பாடு இருக்க வேண்டும் என்று இல்லை. எண் தோன்றிய உடனேயே நீங்கள் நெட்டோடு தொடர்பில் இருக்கின்றீர்களா இல்லையா என்பதை இந்த செயலி அறிந்து கொள்ளும்.
தேவையில்லாத போன் கால்களிலிருந்து பாதுகாத்து கொள்ளவும்.

தானியங்கி

தானியங்கி

உங்கள் கருவியில் இந்த செயலியை டவுன்லோட் செய்த உடனேயே ட்ரூகாலர் தானியங்கியாக உங்கள் பகுதியில் இருக்கும் வேண்டாத நபர்களிடமிருந்து உங்களை பாதுகாக்கும். அவர்களிடம் இருந்து வரும் அழைப்பை நீங்கள் நிராகரிக்கும் வசதியும் இதில் உள்ளது.

செயல்படுத்த

செயல்படுத்த

நீங்கள் வேண்டாதவர்களின் போன் காலை நிராகரிக்கும் வசதி ட்ரூகாலரில் உள்ளது. ஆனால் இது மட்டுமில்லாமல் பல அம்சங்களும் இதில் உள்ளது. ட்ரூகாலரை தாணியங்கியாக நீங்கள் உபயோகப்படுத்தலாம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்று இது உங்களை அறிந்தவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கவும் பயன்படுகின்றது.

சர்ச் பார்

சர்ச் பார்

எந்த போன் எண் என்றாலும் ட்ரூகாலரின் உதவியுடன் கண்டுபிடித்து விடலாம். இதில் இருக்கும் சர்ச் பார் உங்களுக்கு எண்களை கண்டுபிடிக்க உதவுகின்றது. அதில் இருக்கும் இடத்தில் போன் எண்ணை அடித்தாலே போதும். பெயர்கள் மற்றும் விலாசத்தையும் டைப் செய்யலாம்.

 ப்ரோஃபைல்

ப்ரோஃபைல்

ட்ரூகாலரின் உதவியோடு உங்கள் சொந்த ப்ரோஃபைலை செட் செய்ய முடியும். இதனால் உங்களுக்கு போன் செய்பவர்கள் உங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும். உங்கள் முழு பெயர் மற்றும் புகைப்படத்தை கொடுக்கலாம்.
உங்கள் வெப்சைட் மெயில் ஐடி போன்றவற்றையும் கொடுக்க முடியும். உங்களை பற்றிய குறுகிய செய்தியையும் நீங்கள் கொடுக்க முடியும். ப்ரைவசி கருதி சிலர் உங்கள் தகவலை அறியாத படியும் பிளாக் செய்ய முடியும்.

நீக்கம்

நீக்கம்

இந்த செயலியின் உதவியுடன் டேட்டாபேசில் இருந்து உங்கள் எண்ணை நீக்கவும் முடியும். http://www.truecaller.com/unlist என்ற லிங்கை பார்க்க வேண்டும். பிறகு உங்கள் போன் எண்ணை நீங்கள் வசிக்கும் இடத்தின் கோடுடன் டைப் செய்யவும். அதன் பின் எண்ணை நீக்க வேண்டிய காரணத்தை கொடுக்கவும். captchaவை எண்டர் செய்து unlist பொத்தானை கிலிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
hidden features in Truecaller Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X