Home
News

சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே.!

சென்னையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரகசிய கேமராகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆதம்பாக்கம் பெண்கள் விடுதியில் அணைத்து இடங்களிலும் இரகசிய கேமராகள் பொருத்தி இருந்தது விடுதி பெண்களால் கண்டுபிடிக்கப்பட்டு விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில மாதங்களே ஆனா நிலையில், அதே போல் தற்பொழுது சென்னையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இரகசிய கேமராகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரகசிய கேமராகள்

இரகசிய கேமராகள்

பெரியமேடு பகுதி முத்து தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகிக்கும் படி ரூமின் உள் பல இடங்களில் இரகசிய கேமராகள் பொறுத்தப்பட்டுள்ளதாக விருந்தினர் ஒருவர் புகார் அளித்துள்ளார். காவல்துறைக்கு வந்த புகாரின் பெயரில் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக லாட்ஜிற்கு விரைந்துள்ளனர்.

ரூமின் வராண்டா பகுதியில் கேமரா

ரூமின் வராண்டா பகுதியில் கேமரா

பெரியமேடு காவல்நிலைய சிவராஜன் தலைமையிலானா அதிகாரி குழு சோதனை செய்துள்ளனர். காவல் துறை நடத்திய சோதனையில் இரகசிய லாட்ஜில் உள்ள ரூமின் வராண்டா பகுதியில் கேமராகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படுக்கை அரை நோக்கி வைக்கப்பட்டுள்ள இரகசிய கேமரா

படுக்கை அரை நோக்கி வைக்கப்பட்டுள்ள இரகசிய கேமரா

இரகசிய கேமராகள் அனைத்தும் ரூமின் படுக்கை அரை நோக்கி வைக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமையில் நடக்கும் அனைத்தையும் பதிவு செய்யும்படியான நோக்கத்தில் தான் இரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதென்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான செயல்

சட்டவிரோதமான செயல்

லாட்ஜ் நிர்வாகத்தை காவல்துறையினர் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இரகசிய கேமராகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமான செயல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். லாட்ஜில் தங்கி இருந்த விருந்தினர் கூறிய புகாரின் பெயரில் அணைத்து கேமராகளும் நீக்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனை

கடுமையான தண்டனை

இரகசிய கேமரா பதிவுகளை சோதனை செய்தபின் உரிய நடவெடிக்கை எடுக்கப்படுமென்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய இரகசிய கேமராகளை இப்படி கீழ் தரமாய் பயன்படுத்துபவர்களின் மீது கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டுமென்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரையல் ரூமில் இருக்கும் ரகசிய கேமிராவை கண்டுபிடிப்பது எப்படி.?

ட்ரையல் ரூமில் இருக்கும் ரகசிய கேமிராவை கண்டுபிடிப்பது எப்படி.?

ஒவ்வொரு முறையும் ஆடைகளை ட்ரையல் செய்து பார்க்கும் அறைக்குள் நுழையும் போதும் நமக்குள் ஒரு பொதுவான சந்தேகமான கேள்வியொன்று எழும். இந்த ட்ரையல் ரூமில் ஹிட்டன் கேமிரா எனப் பொதுவாக அழைக்கப்படும் இரகசிய கேமிரா இருக்குமோ..??என்பது தான் அந்த கேள்வி..!

உடை மற்றும் ட்ரையல் ரூமாக மட்டுமின்றி ஒரு ஹோட்டல் அறை அல்லது வேறு எந்த இடத்திலாவது ஒரு மறைக்கப்பட்ட கேமரா இருக்கிறதா என்ற சோதனையை செய்வதென்பது நமக்கும், நம்மை போன்ற பிறருக்கும் மிக நல்லது.

மறைக்கப்பட்ட கேமரா

மறைக்கப்பட்ட கேமரா

அப்படியாக நமக்கு முன்பின் பழக்கமில்லாத ஒரு இடத்தில மறைக்கப்பட்ட கேமரா ஏதேனும் இருக்கிறதா என்பதை என்பதை கண்டறிய ஏதேனும் எளிமையான வழிமுறைகள் உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்கிறது தமிழ் கிஸ்பாட்..!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய..

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய..

உண்மையில் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்கள் அனுதினமும் சிறப்பான ஒரு கருவியாக மாறிக்கொண்டே வருகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவி செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ட்ரையல் அறையில் ரகசிய கேமிரா இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய உதவும்.

வாய்ப்பு :

வாய்ப்பு :

நீங்கள் ஒரு ட்ரையல் அறைக்குள் நுழையும் போது உங்கள் நண்பர் ஒருவருக்கு உங்கள் தொலைபேசியில் இருந்து கால் செய்து பாருங்கள் ஒருவேளை உங்கள் அழைப்பு இணைக்கப்படவில்லை எனில் அந்த அறையில் ஒரு மறைக்கப்பட்ட கேமரா இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

அர்த்தம் :

அர்த்தம் :

அதாவது "சமிக்ஞை பரிமாற்றத்தின் போது கண்ணாடி இழை கேபிள்களின் குறுக்கீடுகள்" என்ற அறிவியல் அடிப்படையில் இது சாத்தியமாகலாம். எந்த குறுக்கீடும் இல்லாமல் உங்களால் அழைப்புகளை மேற்கொள்ள முடிந்தால் அதுவொரு கேமரா இல்லாத அறை என்று அர்த்தம்

ஆப் :

ஆப் :

அல்லது ஹிட்டன் கேமிரா டிடக்டர் என்ற ஆப் தனை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். இதன் மூலம் ஒரு மறைக்கப்பட்ட கேமரா உள்ளது என்று சந்தேகம் கொள்ளும் இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை நகர்த்த கேமரா கண்டறியும் கருவியின் சாதனம் சுற்றி இருக்கும் காந்த நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் மற்றும் காந்த நடவடிக்கை இருந்தால் பீப் சப்தம் எழுப்பும்.

கண்டுபிடிக்க முடியும் :

கண்டுபிடிக்க முடியும் :

அல்லது மறைக்கப்பட்ட கேமராவை கண்டறி டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ பயன்பாட்டின் உதவியுடன் பயனர்கள் எந்தவொரு அறிமுகமில்லாத இடங்களில் மறைத்து கேமராக்களையும் கண்டுபிடிக்க முடியும். டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ ஆப் தனை நிறுவவும் அதை திறந்து செட்டிங்ஸ் ஆப் தி பிளாஷ் > இன்ப்ரா ரெட் லைட் ஆதாரங்களை கண்டறிய பிரெக்யூன்சி ஸ்கேன், லைட்டிங் எபெக்ட்ஸ் ஆகியவைகளை நிறுவவும்.

திறமையான முறை :

திறமையான முறை :

நீங்கள் செட்டிங்ஸ்களை நிறுவிய பின்னர் வெறுமனே ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினால் போதும் கண்டறிதல் சோதனையை அந்த ஆப் திறமையான முறையில் நிகழ்த்தும் உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் அதை கண்காணிக்க முடியும்.

ரெட்ரோ- ரெப்லெக்ஷன் :

ரெட்ரோ- ரெப்லெக்ஷன் :

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றோரு ஆப் ஆன க்ளின்ட பைன்டர் ஆப் மூலமும் ஹிட்டன் கேமிராக்களை கண்டறிய முடியும், ரெட்ரோ- ரெப்லெக்ஷன் கொண்ட கேமரா ஃப்ளாஷ் வடிவமைப்பானது பளபளப்பான பொருட்களை அடையாளம் காண அனுமதிக்கிறது

Best Mobiles in India

English summary
Hidden cameras found at a lodge in Periamet : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X