ஜன.22 முதல் Hey Google-க்கு குட்பை.. இனி என்ன சொல்ல வேண்டும்? இந்த மாற்றம் முதலில் எந்தெந்த Phone-களில் வரும்?
கூகுள் (Google) நிறுவனத்தின் ஏஐ அசிஸ்டென்ட்டை "எழுப்புவதற்கு" கடந்த பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தும் "ஹே கூகுள்" (Hey Google) என்கிற வார்த்தைகளுக்கு குட்பை சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது போல தெரிகிறது. இனிமேல் என்ன சொல்ல வேண்டும்? இந்த மாற்றம் முதலில் எந்தெந்த போன்களுக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஹே கூகுள் என்கிற வேக் வேர்ட்ஸ் (Wake Words) ஆனது கூடிய விரைவில் "ஹே ஜெமினி" (Hey Gemini) என்று மாறவுள்ளது. வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் (Samsung Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களில், கூகுள் ஏஐ அசிஸிடண்ட்டிற்கான வேக் வேர்ட்ஸ் ஆனது "ஹே ஜெமினி" ஆக மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மையாக இருந்தால், ஹே ஜெமினி என்கிற வேக் வேர்ட்ஸ்-க்கான ஆதரவை பெறும் முதல் ஸ்மார்ட்போன்களாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் இருக்கும். அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஆகிய மாடல்களில் ஹே ஜெமினி ஆதரவை பெறும் முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும்.
தற்போதைய சூழலை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் உள்ள ஜெமினி ஏஐ (Gemini AI) ஆனது எந்தவிதமான பிரத்யேக வேக் வேர்ட்ஸ்-ஐயும் கொண்டிருக்கவில்லை. மாறாக கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் ஜெமினி ஆகிய - உங்கள் டீபால்ட் செட்டிங்ஸை (Deafault Settings) பொறுத்து - ப்ரைமரி ஹாட்வேர்ட் (Primary Hotword) ஆக ஹே கூகுள் என்பதையே நம்பியுள்ளது.
கூகுள் தனது புதிய அம்சங்களை சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மூலம் அறிமுகம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நினைவூட்டும் வண்ணம், அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை மிகவும் பிரபலமான அம்சமாக இருக்கும் கூகுளின் "சர்க்கிள் டு சேர்ச்" அம்சமானது (Google Circle to Search Feature) முதலில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸில் (Samsung Galaxy S24 Series) தான் அறிமுகமானது!
ஹே ஜெமினி-க்கான ஆதரவு ஒருபக்கம் இருக்க.. சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸில் ஜெனெரேட்டிவ் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Generative Artificial Intelligence - gen AI) அடிப்படையிலான புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களை (New Galaxy AI Features) அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த டீஸர் வீடியோவில், ஒரு கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன் உரிமையாளர் கேலக்ஸி ஏஐ உடன் உரையாடுகையில், கேலக்ஸி ஏஐ-யிடம் அருகிலுள்ள செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற இத்தாலிய உணவகத்தை கண்டுபிடித்து, வெளிப்புற இருக்கைகளுடன் கூடிய விவரங்களை தன் நண்பர்களுடன் பகிர்ந்து, அதை காலண்டரில் ரிமைண்டர் ஆக வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்.
அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் வழியாக அறிமுகம் செய்யப்படப்போகும் புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்கள் ஆனது இரண்டு நபர்கள் ஒருவர் ஒருவருடன் பேசிக்கொள்வது போல மிகவும் இயல்பானதாக இருக்கப்போகிறது. மேலும், கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 ஓஎஸ் மூலம் கேலக்ஸி ஏஐ-பவர்டு ஸ்கெட்ச் டு இமேஜ் திறனானது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதையும் சாம்சங் வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்கெட்ச் டு இமேஜ்-ன் கீழ் பயனர்கள் ஒரு தோராயமான ஓவியத்தை வரைந்தால், ஸ்கெட்ச் டு இமேஜ் அம்சமானது அதை முழு வரைபடமாக வரைந்து முடிக்க அனுமதிக்கும். இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏஐ அம்சங்கள் ஆனது முதலில் எஸ்25 சீரீஸ், பின்னர் எஸ்24 சீரிஸ், கேலக்ஸி இஸட் போல்ட் 6, கேலக்ஸி பிளிப் 6 ஆகிய மாடல்களை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பழைய சாம்சங் மாடல்களுக்கும் வந்து சேரும்.


Click it and Unblock the Notifications








