ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் சி.இ.ஓக்கள் பெறும் வருமானம்: எவ்வளவு தெரியுமா?
ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து மிகப்பெரிய சவால்களை சந்தித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி மற்றும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்று என்பதும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலைக்கு நிறுவனத்தை கொண்டு வர, இந்நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து மிகப்பெரிய சவால்களை சந்தித்து அதை தனது குழுவினர்களுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிம் குக் அவர்களின் சம்பளம் மட்டுமே சுமார் ரூ.4970 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் பங்குகளில் இருந்து மட்டுமே அவர் ரு.4610 கோடியை பெற்றிருந்தார் என கூறப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பர்க் அவரக்ளை விட வருமானத்தில் பின் தங்கிதான் உள்ளார்.
ஆப்பிள் சி.இ.ஓவை விட அதிக வருமானம் பெறுவதிலும் அதிக விருப்பங்களை பெறுவதிலும் அதாவது உலகம் முழுவதிலும் சுமார் 1.2 மில்லியன் விருப்பங்களை அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெற்றுள்ளதாக சீனியர் ரிசர்ச் அனாலிஸ்ட் அலெக்ஸ் நோல்டன் என்பவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க் $ 0.06 என்ற ஒரு பங்கு விலையை கொடுத்து, ரூ. 41,124 கோடி மதிப்புள்ள விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதே நேரத்தில் குக் சமீபத்தில் தனது டிரஸ்ட் மூல்ம் சுமார் ரூ,35 கோடியை தனது வாழ்நாளில் அதிகபட்ச நன்கொடைகளை பல்வேறு அமைப்புகளுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகளுக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு இருப்பதை அடுத்து தற்போது மூன்று புதிய ஐபோன் மாடல்களை வெளியிட உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் இந்த மாட்ல்கள் மிக விரைவில் ஒரு நிகழ்ச்சியின்போது அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள இந்த மாடல்களுக்கு புதன் கிழமையே முன்பதிவு ஆரம்பமாகும் என்பதால் முன்பதிவின் மூலமே மிகப்பெரிய வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் கடைகளில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications