இந்த குரோம் எக்ஸ்டென்ஷன் அந்த பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்

2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. எனும் முறையை கண்டறிந்தனர்.

|

நம் அன்றாட வாழ்க்கையில் இண்டர்நெட் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனினும், இதனை அனைவரும் உண்மையில் இது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை. இணையத்தில் மற்றவர்களை தொந்தரவு செய்தல் மற்றும் மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ தினமும் இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

புதிய குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களை காப்பாற்றவே உருவாகியுள்ளது

எனினும், ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் இணைய உலகினை பாதுகாப்பாக மாற்றினால் எப்படி இருக்கும்? இதை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் ஜிக்சா குழுவினர் ஈடுபட்டனர். 2017 ஆம் ஆண்டு பெர்ஸ்பெக்டிவ் ஏ.பி.ஐ. எனும் முறையை கண்டறிந்தனர். இந்த பெர்ஸ்பெக்டிவ் இணைய உரையாடல்களை சிறப்பானதாக மாற்றும். மெஷின் லெர்னிங் மூலம் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு இதனை டெவலப்பர்கள், மாடரேட்டர்கள் மற்றும் அட்மின்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இதை கொண்டு இவற்றின் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க முடியும்.

குரோம் எக்ஸ்டென்ஷன்

குரோம் எக்ஸ்டென்ஷன்

இதன் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் விதமாக கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் பரவும் தீய மற்றும் எதிர்மறை கரு்துக்களை தடுத்து நிறுத்தும். இந்த எக்ஸ்டென்ஷன் டியூன் என அழைக்கப்படுகிறது. ஜிக்சா குழுவினர் உருவாக்கியிருக்கும் டியூன் எக்ஸ்டென்ஷன் கொண்டு நீங்கள் கமெண்ட்களில் பார்க்க விரும்பாத தீய கருத்துக்களை தடுத்து நிறுத்த முடியும்.

சென் மோட்

சென் மோட்

டியூன் எக்ஸ்டென்ஷனில் இருக்கும் சென் மோட் கொண்டு அனைத்து விதமான தீய கருத்துக்களையும் நீக்கிவிட முடியும். இந்த எக்ஸ்டென்ஷன் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கஸ் மற்றும் ரெடிட் என பல்வேறு பிரபல தளங்களில் சீராக இயங்குகிறது. டியூன் மெஷின் லெர்னிங் மூலம் இயங்குவதால், இது பயன்பாட்டிற்கு ஏற்றவாரு சிறப்பாக செயல்பட துவங்தும். அதிகப்படியான தரவுகளை படிக்கும் போது புதிய கருத்துக்களை கவனித்துக் கொள்ளும்.

ஆனைலன் அனுபவத்தை மேம்படுத்தும்

ஆனைலன் அனுபவத்தை மேம்படுத்தும்

ஆன்லைன் துன்புறுத்தல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையாது என்றாலும், இது மென்பொருள் கொண்ட ஆனைலன் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இது சிறப்பான சேவையாகவே பார்க்கப்படுகிறது. குரோம் எக்ஸ்டென்ஷன் என்பதால் இதனை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்துவிட முடியும்.

தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும்

தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும்

குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ததும், நீங்கள் பார்க்க விரும்பாத தகவல்களுக்கான அளவை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் சில கருத்துக்கள் சரியாக தடுக்கப்படாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Here’s A Chrome Extension That Tries To Save You From Cyberbullying, Using AI: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X