ஆரம்பமாகும் ஐபிஎல் 2021: இலவசமாக பார்ப்பதற்கு இதான் வழி!

|

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 14-வது ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டியானது சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மைதாளங்களில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு, மும்பை அணிகளுக்கு இடையே நடக்கிறது.

ஐபிஎல் 2021 போட்டி

ஐபிஎல் 2021 போட்டி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் பார்வையாளர்கள் இன்றி நடக்கிறது. பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்தார். கடந்த இரண்டு தொடர்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தாண்டு போட்டி கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இலவசமாக பார்ப்பதற்கான வழிமுறைகள்

இலவசமாக பார்ப்பதற்கான வழிமுறைகள்

ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்ப்பதற்கான வழிமுறைகளையும், கட்டணம் செலுத்தி ஸ்மார்ட்போன் மூலம் காண்பதற்கான வழிமுறைகளையும் தற்போது பார்க்கலாம். ஐபிஎல் 2021 தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிது என்றே கூறலாம்.

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள் சலுகை

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள் சலுகை

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள், விஐ ரீசார்ஜ் திட்டங்கள், ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள், ஜியோ ஃபைபர், ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ், டாடா ஸ்கை ஆகிய திட்டங்கள் மூலம் ஐபிஎல் போட்டியை இலவசமாக காணலாம். இதில் டாடா ஸ்கை தவிர பிற அனைத்து திட்டங்களிலும் ஐபிஎல் போட்டியை இலவசமாக அதன் திட்டங்களோடு பார்க்கலாம்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

காரணம் ஜியோவின் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இலவச அணுகலை வழங்குகிறது. ஜியோ பயனர்கள் குறிப்பிட்ட திட்டங்களின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது தங்களது ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள், விண்டோஸ் மடிக்கணினிகள், மேக் ஆகியவற்றில் இலவசமாக பார்க்கலாம்.

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள்

தொலைத்தொடர்பு நிறுவன திட்டங்கள்

குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது திட்டங்களிலேயே ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குவதால், வாடிக்கையாளர்கள் ஐபிஎல் பார்ப்பதற்கு என தனியாக ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.

ஜியோ நிறுவனம் வழங்கும் சலுகைகள்

ஜியோ நிறுவனம் வழங்கும் சலுகைகள்

ஜியோ நிறுவனம் சில சிறந்த சலுகைகளை அறிவித்துள்ளது. ஜியோ வழங்கும் ரூ.401 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் அவைப்பு, தினசரி 3ஜிபி டேட்டா, கூடுதலாக 6ஜிபி 4ஜி டேட்டா ஆகியவற்றோடு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகலை நிறுவனம் வழங்குகிறது. அதேபோல் ரூ.598 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்போடு 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மேலும் ஜியோ வழங்கும் ரூ.777 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, கூடுதல் 5ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரலழைப்பு சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. ரூ.2,599 திட்டத்தில் ஜியோ நிறுனம் தினசரி 2ஜிபி டேட்டா, 10ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்புகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த அனைத்து திட்டத்திலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் கிடைக்கிறது.

விஐ ரீசார்ஜ் திட்டங்கள்

விஐ ரீசார்ஜ் திட்டங்கள்

விஐ நிறுவனமும் சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் கூட்டு வைத்து தனது திட்டங்களுடன் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது. விஐ வாடிக்கையாளர்கள்., ரூ.401, ரூ.501, ரூ.601, ரூ.801 போன்ற திட்டங்களில் நிறுவனம் சலுகைகளை வழங்கி வருகிறது.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் பயனர்கள் ஐபிஎல் போட்டி நேரலையை காண்பதற்கு இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யலாம். அந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில், அவை ரூ.448, ரூ.599 மற்றும் ரூ.2,698 ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது அதிக டேட்டா கிடைப்பதால் தடையின்றி ஐபிஎல் போட்டியை காணலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here the Simple steps to watch IPL 2021 for free

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X