கெத்து காட்டும் Vi Double data ஆபர்: அதே விலையில் இரட்டிப்பு டேட்டா!
Vi வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. வீ நிறுவனத்தின் டபுள் டேட்டா சலுகை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை
வோடபோன் ஐடியா தங்களின் பிராண்ட் அடையாளத்தை மாற்றி வீ என்று அறிமுகம் செய்த பிறகு அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் ஏணைய சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக டபுள் டேட்டா சலுகை அறிவித்து இருக்கிறது.

டபுள் டேட்டா சலுகை
டபுள் டேட்டா சலுகை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கிறது. அதாவது 2ஜிபி டேட்டா திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு டேட்டா சலுகையை நிறுவனம் வழங்குகிறது.

ரூ.299 திட்டம் டபுள் டேட்டா சலுகை
ரூ.299 திட்டம் டபுள் டேட்டா சலுகையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் 2ஜிபி அளவிலான டேட்டாவை தினசரி அடிப்படையில் 28 நாட்களுக்கு வழங்கியது. டபுள் டேட்டா சலுகை அறிவித்த பின்பு இந்த திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா அதே 28 நாட்கள் சலுகையோடு வழங்குகிறது.

மொத்தம் 112 ஜிபி டேட்டா
அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வீ மூவிஸ் மற்றும் டிவி அணுகல், எம்பிஎல் கேஷ்பேக் சொமாட்டோ தள்ளுபடி உள்ளிடட் சலுகைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 112 ஜிபி டேட்டா பெறுகிறார்கள்.

ரூ.449 திட்டத்தில் டபுள் டேட்டா சலுகை
ரூ.449 திட்டமும் டபுள் டேட்டா சலுகையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 2ஜிபி டேட்டாவை 56 நாட்கள் செல்லுபடியோடு வழங்குகிறது. டபுள் டேட்டா அறிவிப்புக்கு பின் இந்த திட்டத்தில் தினசரி 4 ஜிபி டேட்டா அதே 56 நாட்கள் செல்லுபடியில் வழங்குகிறது.

மொத்தம் 224 ஜிபி டேட்டா
இந்த திட்டத்தில் மொத்தம் 224 ஜிபி டேட்டா சலுகையை பெறுவார்கள். இதிலும் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள், வீ மூவிஸ் மற்றும் டிவி அணுகல், எம்பிஎல் கேஷ் சொமாட்டோ தள்ளுபடி உள்ளிட்ட நன்மைகளை பெறுவார்கள்.

ரூ.699 திட்டத்தில் டபுள் டேட்டா சலுகை
ரூ.699 திட்டத்தை பொருத்தவரை இதில் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகைக்கு பதிலாக 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். டபுள் டேட்டா அறிவிப்புக்கு பின் இந்த திட்டத்தில் மொத்தம் 336 ஜிபி டேட்டாவை வழங்குகிறது நிறுவனம்.

வரம்பற்ற குரலழைப்பு
அதோடு இந்த திட்டத்திலும் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள், வீ மூவிஸ் மற்றும் டிவி அணுகல், எம்பிஎல் கேஷ் சொமாட்டோ தள்ளுபடி உள்ளிட்ட நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications