தாராளமா வாங்கலாம் போல- அதிக பேர் இந்த ஸ்மார்ட்போன்களை தான் தேடிருக்காங்க: அப்போ இதுல என்னமோ இருக்கு!

|

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. பல்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பயனர்கள் அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப சிறந்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களை விற்கும் ஆன்லைன் தளங்கள்

ஸ்மார்ட்போன்களை விற்கும் ஆன்லைன் தளங்கள்

அதேபோல் ஸ்மார்ட்போன்களை விற்கும் ஆன்லைன் தளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் பிரதானமாக இருக்கும் ஆன்லைன் தளங்கள் குறித்து பார்க்கையில், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். பல்வேறு விலைப்பிரிவிலும் பல்வேறு அம்சங்களோடும் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்வதால் பயனர்களுக்கு எந்த ஸ்மார்ட்போன்கள் வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். கையில் இருக்கும் பட்ஜெட் பணத்தில் பல்வேறு அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்பதே அனைவரின் திட்டமாகும்.

அதிகம் தேடப்படும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

அதிகம் தேடப்படும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

இ-காமர் வலைதளங்களில் அதிகம் தேடப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைன் தளங்களிலேயே ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்து ஒப்பீடு செய்து கொள்ளலாம். இந்தியாவில் முன்னணி இகாமர்ஸ் தளமாக இருக்கும் பிளிப்கார்ட்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம். இதில் விவோ வி15, ஐபோன் 8, ஒப்போ எஃப் 11 ப்ரோ போன்ற சாதனங்கள் பட்டியலில் இருக்கின்றன.

விவோ வி15 முக்கிய அம்சங்கள்

விவோ வி15 முக்கிய அம்சங்கள்

விவோ வி15 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பயனர்கள் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. எம் 900 மெகா ஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி 72 எம்பி 3ஜிபீயூ ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை ஆதரவோடு ஃபன் டச் ஓஎஸ் 9 உடன் வருகிறது. இதில் இரட்டை நானோ சிம் ஆதரவுடன் வருகிறது. 12MP (இரட்டை பிக்சல்கள்) + 5MP + 8MP பின்புற கேமரா அமைப்பும், 32 எம்.பி முன்புற கேமரா, இரட்டை 4ஜி வோல்ட் மற்றும் 4000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 8 அம்சங்கள்

ஐபோன் 8 அம்சங்கள்

ஐபோன் 8 அம்சங்கள் குறித்து பார்க்கையில் 4.3 டி டச் கொண்ட 4.7 இன்ச் ரெடினா எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஹெக்ஸா கோர் ஆப்பிள் ஏ11 பயோனிக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஃபோர்ஸ் டச் பயோனிக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 64 ஜிபி உள்சேமிப்பு 2 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. மேலும் இதில் நீர் தூசி எதிர்ப்பு ஆதரவும் இருக்கிறது.

ஐபோன் 7 ப்ளஸ் முக்கிய அம்சங்கள்

ஐபோன் 7 ப்ளஸ் முக்கிய அம்சங்கள்

ஐபோன் 7 ப்ளஸ் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 3டி டச் 5.5 இன்ச் ரெடினா எச்டி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மேலும் இது குவாட் கோர் ஆப்பிள் ஏ10 ஃப்யூஷன் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற மூன்று வேரியண்ட்டில் வருகிறது. இது ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி ஆதரவோடு வருகிறது. இதில் இரட்டை 12 எம்பி ஐசைட் கேமரா மற்றும் 7 எம்பி முன்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது எல்டிஇ ஆதரவோடு நீர் தூசி எதிர்ப்பு அம்சத்தோடு வருகிறது.

ரியல்மி 3 முக்கிய அம்சங்கள்

ரியல்மி 3 முக்கிய அம்சங்கள்

ரியல்மி 3 முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டச் மாதிரி டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் மீடியா டெக் ஆதரவோடு வருகிறது. மேலும் இது 32 ஜிபி, 64 ஜிபி உள்சேமிப்போடு ஆதரவோடு வருகிறது. இது 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. மேலும் இது இரட்டை சிம் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை இது ப்ளூடூத், 4230 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது.

ஒப்போ எஃப் 11 ப்ரோ முக்கிய அம்சங்கள்

ஒப்போ எஃப் 11 ப்ரோ முக்கிய அம்சங்கள்

ஒப்போ எஃப் 11 ப்ரோ முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் இருக்கிறது. 900 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி72 ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமராக்கள் உள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here the List of Most Searched Smartphones in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X