தாராளமா வாங்கலாம்: ரூ.15,000-க்கு கீழ் ஸ்மார்ட் டிவிகள்., டாப் பெஸ்ட் கம்பெனிகள்!
ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் உட்பட அனைத்து மின்னணு நிறுவனங்களும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவிகள்
ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.15000-த்துக்கு கீழ் ஸ்மார்ட்டிவிகள்
ஸ்மார்ட் டிவிகளில் பல்வேறு அளவுகளில் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ரூ.15000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் குறித்து பார்க்கலாம். இதில் சாம்சங், வி.யூ, எல்ஜி, எம்ஐ டிவி, ஒன்ப்ளஸ் உள்ளிட்ட பல முன்னணி பிராண்ட் டிவிகளும் உள்ளன.

எல்ஜி ஹெச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி
ஸ்மார்ட் டிவி சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எல்ஜி, தொடர்ந்து பல்வேறு மாடல்களில், அளவில் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. இதில் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ரூ.14,999 ஆக உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி வசதிகளோடு இந்த டிவி இயங்குகிறது. 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் இதில் உள்ளன. அதோடு யூஎஸ்பி போர்ட், ஹார்ட் டிரைவ், பென் டிரைவ்கள் ஆகியவை உள்ளன. மேலும் டிவியை வைபை வசதியோடு இணைக்கலாம்.

சாம்சங் வொண்டர்டெயின்மென்ட் சீரிஸ்
சாம்சங் வொண்டர்டெயின்மென்ட் சீரிஸ் ஹெச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி, சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சிறப்பம்சங்களோடு டிவிகளை அறிமுகம் செய்கிறது. இந்த டிவியில் ஓடிடி சேவைகள் இல்லாதபோதும் இதை பெர்சனல் கம்யூட்டருடன் இணைத்துக் கொள்ளலாம். இதில் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் அம்சம் உள்ளது.

ஒன்ப்ளஸ் வொய் சீரிஸ் ஹெச்டி
ஒன்ப்ளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கொடிக்கட்டி பறந்தாலும். ஸ்மார்ட்டிவி வரிசையில் இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரிவ்யூக்கள் சற்று இறக்கத்தை நோக்கியே இருந்தாலும் இந்த டிவி ரூ.12,999 ஆக இருக்கலாம். ஆண்ட்ராய்டு 9 மூலம் இயக்கப்படும் இந்த டிவி, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் டால்பை உள்ளது. மேலும் இதில் ஓடிடி சேவைகள் ஆதரவும் ரிமோட்டில் செயலிக்கான பட்டன்களும் உள்ளது.

வியூ ஹெச்டி ரெடி அல்ட்ரா ஆண்ட்ராய்டு எல்இடி டிவி
வியூ நிறுவனத்தின் அல்ட்ரா ஆண்ட்ராய்டு எல்இடி டிவியானது 32ஜிஏ எல்இடி ஸ்மார்ட்டிவி அம்சத்தோடு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ. 12,499 ஆக இருக்கிறது, அதேபோல் இது எல்இடி ஹை பிரைட்னெஸ் ஏ ப்ளஸ் க்ரேட் ஆண்ட்ராய்டு பை 9.0, 2 யூஎஸ்பி போர்ட்கள் ஆகியவை உள்ளது.

எம்ஐ டிவி 4ஏ ப்ரோ ஹெச்டி
எம்ஐ டிவி 4ஏ ப்ரோ ஹெச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி., சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்டிவியானது எம்ஐ டிவி 4ஏ ப்ரோ விலை ரூ.12,999 ஆகவும். 2 யூஎஸ்பி போர்ட்கள், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஓடிடி சேவையானது நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஆதரவோடு ரிமோட் செயலிக்கான பட்டன்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications