குறைந்த விலையில் 3.3டிபி டேட்டா: ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களே!

|

பிராட்பேண்ட் திட்டங்களில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க பல்வேறு சலுகைகளோடு கூடிய அதிக அளவு டேட்டாவை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் வழங்கும் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பிஎஸ்என்எல் புதிய திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் வரம்பற்ற தரவோடு கூடிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதற்கேற்ப பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.500-க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.500-க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டம்

ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் ரூ.500-க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மலிவு விலை திட்டங்கள்

மலிவு விலை திட்டங்கள்

கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது என பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு இணைய சேவை பிரதானமாக இருந்து வருகிறது. இதில் ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் மலிவு விலை திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல்லின் ரூ .449 பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ .449 பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ .449 பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு 3.3 டிபி தரவு மற்றும் மாதத்திற்கு 30 Mbps வேகத்தை வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் தரவு முடிந்தவுடன் இணைய வேகம் 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் 1 மாதத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் எனவும் வரம்பற்ற குரலழைப்புகளோடு இந்த திட்டம் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் பெறுவதற்கு புதிய வாடிக்கையாளர்கள் ரூ.500 நிறுவல் கட்டணம் செலுத்த வேண்டும்.

கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!

ஜியோ ஃபைபர் ரூ.399 திட்டம்

ஜியோ ஃபைபர் ரூ.399 திட்டம்

ஜியோ ஃபைபர் ரூ.399 திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் ப்ரவுன்ஸ் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்யலாம். 3.3 டிபி தரவை வழங்குகிறது. இணைய வரம்பு முடிந்ததும் 1 எம்பிபிஎஸ் ஆக வேகம் குறைக்கப்படும். அதேபோல் இதை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.1000 நிறுவல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம் வரம்பற்ற அழைப்போடு வருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 3.3 டிபி டேட்டா மற்றும் 40 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு மற்றும் ஓடிடி சலுகைகளை வழங்குகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக், ஷா அகாடமி, ஈராஸ் நவ், ஹங்காமா ப்ளே உள்ளிட்ட சந்தா சலுகையை வழங்குகின்றன. இந்த திட்டத்திற்கும் நிறுவல் தொகை ரூ.1,000 செலுத்த வேண்டும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

பிற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஏணைய நன்மைகளையே வழங்குகிறது. இந்த திட்டத்தில் டேட்டா வரம்பு உள்ளிட்ட சலுகைகளை நிறுவனம் வழங்குவதோடு ஓடிடி அணுகலையும் வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here the List of Airtel, Jio, Bsnl Broadband Plans Under Rs.500

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X