ஐஓஎஸ் 15-ல் மறைந்திருக்கும் சிறந்த அம்சங்கள்: ஆப்பிள் சொல்லாத உண்மைகள்!

|

ஐபோன் சாதனத்தில் விரும்பக்கூடிய பல அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தங்கள் ஐபோனில் மறைக்கப்பட்ட அம்சங்கள் நிரம்பியுள்ளன.

ஐஓஎஸ் 15 மற்றும் ஐபாட் ஓஸ் 15

ஐஓஎஸ் 15 மற்றும் ஐபாட் ஓஸ் 15

இந்தாண்டின் பிற்பகுதியில் தங்களது ஐபோன் மற்றும் ஐபாட் முறையே ஐஓஎஸ் 15 மற்றும் ஐபாட் ஓஸ் 15 வடிவ பெரிய புதுப்பிப்பை பெறுகின்றன. புதுப்பிப்பு எண்ணற்ற புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை கருவிகள், தொந்தரவு அற்ற மற்றும் ஃபேஸ்டைம் மாற்றங்களை செயல்படுத்த இருக்கின்றன.

புதிய அப்டேட் விவரம்

புதிய அப்டேட் விவரம்

தற்போதைக்கு இணக்கமான ஐபோன் அல்லது ஐபாட் வைத்திருக்கும் அனைவரும் இந்த புதிய அம்சங்களை பயன்படுத்த விரும்பினால் பீட்டா பதிவு பெறலாம். மேலும் பீட்டா பதிப்பை விட நிலையான பதிப்பை பயன்படுத்துவதே சிறந்தது. காரணம் பீட்டா பதிப்பில் ஏணைய பிழைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பீட்டா பதிப்பு சோதனை வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம்

நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம்

ஐஓஎஸ் 15 அறிவிக்கப்பட்டபோது சில புதிய அம்சங்களை ஆப்பிள் வெளியிடவில்லை. உதாரணமாக முழு ஓஎஸ்-ல் கட்டமைக்கப்பட்ட ஸ்கேனிங் கருவி, நேரடியாக ஸ்கேனிங் செய்து ஆவணத்தை பதிவிறக்கவும் பதிவேற்றவும் எளிதாக்குகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு நாட்கள் நெருங்கும் காலக்கட்டத்தில் கூடிய விவரங்கள் கிடைக்கும்.

புதிய ஸ்கேன் அம்சம் கருவி

புதிய ஸ்கேன் அம்சம் கருவி

தங்கள் ஐபோனின் கேமராவில் படம் எடுக்கப்படும் எழுத்துகள் அல்லது மின்னஞ்சல் தகவல்களை தாமாகவே ஆவணத்தில் நகலெடுக்க நீங்கள் விரும்பியுள்ளீர்களா?. ஐஓஎஸ் 15 தளத்தில் இது சாத்தியமானதாகும்.

ஐபோனின் புதிய ஸ்கேன் அம்சம் கருவியை பயன்படுத்த நீங்கள் Copy Paste என்ற இரண்டு வார்த்தையை கிளிக் செய்தாலே போதுமானதாகும். ஸ்கேன் டெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது இந்த தேர்வு உங்களால் காண்பிக்கப்படும்.

ஆவணத்தை பாயிண்ட் செய்து ஸ்கேன் செய்யவும்

ஆவணத்தை பாயிண்ட் செய்து ஸ்கேன் செய்யவும்

இந்த பட்டனை கிளிக் செய்யும் போது கேமராவில் கீபோர்ட் இல்லாமல் காண்பிக்கப்படும். எந்த எழுத்துகள் வேண்டுமோ அதை பாயிண்ட் செய்து ஸ்கேன் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் திரையில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் கேமரா மற்றும் உரையை சரியாக வரிசைப்படுத்தும் போது, காட்சியின் ப்ரிவ்யூ காண்பிக்கப்படும். அதன்பின் இன்ஸர்ட் செய்யும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். வணிக பயன்பாடுக்கான மின்னஞ்சல் முகவரியை விரைவாக ஸ்கேன் செய்து அணுகலாம்.

பிரபலமான வானிலை பயன்பாடான டார்க் ஸ்கை

பிரபலமான வானிலை பயன்பாடான டார்க் ஸ்கை

ஐபோனின் வானிலை பயன்பாட்டில் இருந்து நிகழ்நேர மழை அல்லது பனி எச்சரிக்கைகளை காணலாம். ஆப்பிள் பிரபலமான வானிலை பயன்பாடான டார்க் ஸ்கை வாங்கிகயது. இந்த பயன்பாடானது அதிகாரப்பூர்வ வானிலை பயன்பாடாகும் இது நிகழ்நேர மழை மற்றும் பனி எச்சரிக்கைகளை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழிப்பூட்டல்கள் ஐஓஎஸ் 15-ல் அறிமுகமாக உள்ளன.

நிகழ்நேர வானிலை தகவல்கள்

நிகழ்நேர வானிலை தகவல்கள்

ஐஓஸ் 15 பயன்பாட்டை இயக்கியதும், வானிலை பயன்பாட்டை திறந்து புதிய மழைப்பொழிவுக்கான விழிப்பூட்டல்களை இயக்கலாம். திரையின் கீழ் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து மேல் வலது மூலையில் இருக்கும் ஐகானை கிளிக் செய்யலாம். இருப்பிடம் அறிவதற்கு அதில் காட்டப்படும் ஸ்விட்சை நகர்த்தி ஆன் செய்ய வேண்டும். வானிலை பயன்பாட்டில் கூடுதல் விழிப்பூட்டல்களையும் இயக்கலாம். இதை ஒருமுறை இயக்கினால் மழை அல்லது பனிப்பொழிவு நெருக்கமாக இருக்கும்போது எச்சரிக்கை ஏற்படுத்தும். மழை கிட்டத்தட்ட முடியும்பட்சத்தில் அதற்கான எச்சரிக்கையும் ஏற்படுத்தப்படும்.

புகைப்படங்கள் பார்க்கும் அம்சம்

புகைப்படங்கள் பார்க்கும் அம்சம்

மேலும் புகைப்படங்கள் பயன்பாட்டை திறந்து உங்கள் சமீபத்திய புகைப்படங்களை காண்பதற்கு. ஒரு புகைப்படம் இருக்கும் போது ஒரு விரலை வைத்து திரை முழுவதும் இழுக்க வேண்டும். அப்படி இழுக்கும்பட்சத்தில் தங்களது மீதமுள்ள புகைப்படங்கள் சிறய அளவில் மிதக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புகைப்படங்களை எங்கிருந்து சேமித்தீர்கள் என்பதை இதில் காண முடியும். ஐஓஎஸ் 15-ல் கண்டறிவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. எனவே இந்த அம்சங்கள் குறைவே. ஐஓஎஸ் 15-ல் கண்டறிய ஏணைய அம்சங்கள் உள்ளது.

Source: cnet.com

Best Mobiles in India

English summary
Here the Hidden Features in IOS 15 Update: camera scan, weather and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X