Home
News

சிறந்த மற்றும் மலிவான திட்டங்கள் இதுதான்: ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களா நீங்கள்!

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் மலிவு விலையில் போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்கி வருகின்றன. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஜியோ வருகைக்கு பிறகு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு வகையில் சிக்கல்களை சந்தித்து வருகிறது. காரணம் ஜியோ குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளோடு திட்டங்களை வழங்கி வருகிறது. ஜியோ குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம்.

சிறந்த மற்றும் மலிவு விலை திட்டம்

சிறந்த மற்றும் மலிவு விலை திட்டம்

ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் வழங்கும் சிறந்த மற்றும் மலிவு விலை திட்டம் குறித்து பார்க்கலாம். மலிவு விலையில் பல்வேறு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. நீங்கள் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் இது சிறந்த தேர்வாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனங்களின் திட்டங்களின் விலையும் மாறுபடுகின்றன. இவற்றின் விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ரூ.399 திட்டம் நிறுவனம் அறிமுகம் செய்த மலிவான போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் இலவச ஓடிடி சந்தாக்கள், தரவு மாற்றும் வசதி ஆகியவைகள் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரலழைப்பு வசதியோடு வருகிறது. மேலும் மாதத்திற்கு 75 ஜிபி டேட்டாவுடன் 200 ஜிபி டேட்டா ரோல் வசதியும் இதில் இருக்கிறது. டேட்டா முடிந்த பிறகு 1ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும்.

இலவச ஓடிடி அணுகல்

இலவச ஓடிடி அணுகல்

நெட்பிளிக்ஸ் திட்டத்திற்கான இலவச அணுகல் ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் பிரைம் சந்தா மற்றும் இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி அணுகல் வழங்கப்படுகிறது. ரூ.399 உடனான ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஜியோ ஓடிடி பயன்பாடுகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா இலவச அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ.599 திட்டம்

ஜியோ ரூ.599 திட்டம்

ரூ.599 மதிப்புள்ள ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதத்திற்கு 100 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 100 ஜிபி தரவு நிறைவடைந்த பின் ஒரு ஜிபி டேட்டாக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கூடுதல் சிம் கார்ட் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி அணுகல் சலுகையும் வழங்கப்படுகிறது. JioTV, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகிய ஜியோ ஓடிடி அணுகலும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம் என்பது தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மலிவு விலை திட்டமாகும். இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டாவுடன் 40 ஜிபி மாதாந்திர தரவையும் வழங்குகிறது. தரவு முடிந்த பிறகு ஒரு எம்பிக்கு 2 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இது தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் ஷா அகாடமி ஒரு வருட அணுகல், ஜாகர்நாட் புத்தகங்கள், ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் ஆப் ப்ரீமியம் மற்றும் விங்க் சந்தா நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.499 திட்டம்

ஏர்டெல் ரூ.499 திட்டம்

ஏர்டெல் வழஹ்கும் ரூ.499 ரீசார்ஜ் திட்டத்தில் 200 ஜிபி ரோல்ஓவர் வசதியை வழங்குகிறது. அதோடு 75 ஜிபி மாதாந்திர தரவை வழங்குகிறது. தரவு முடிந்தவுடன் ஒரு எம்பிக்கு 2 பைசா வசூலிக்கப்படுகிறது. இது உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி, ரோமிங் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் 1 வருடத்திற்கு அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஷா அகாடமி அணுகல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் ப்ரீமியம் மற்றும் விங்க் பயன்பாடு அணுகல் ஆகியவைகளை வழங்குகிறது.

விஐ ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

விஐ ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டம் மாதாந்திரம் ரூ.399 என்ற சலுகையில் வழங்குகிறது. 40 ஜிபி டேட்டாவுடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்பு வசதிகளை வழங்குகிறது. இதில் 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளாக விஐ மூவிஸ், டிவி அணுகல் ஆகியவைகளை வழங்குகிறது. இதன்மூலம் ப்ரீமியம் திரைப்படங்கள், நேரடி தொலைக்காட்சி உள்ளிட்ட ஓடிடி அணுகலை வழங்குகிறது.

விஐ ரூ.499 ரீசார்ஜ் திட்டம்

விஐ ரூ.499 ரீசார்ஜ் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.499 விலையில் திட்டங்களை வழங்குகிறது. வரம்பற்ற தரவு மற்றும் பல ஓவர் தி-டாப் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரையில் அமேசான் பிரைம் வீடியோ இலவச சந்தா அணுகலை பெறுகின்றனர். இதன் மதிப்பு ரூ.999 ஆக இருக்கிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி இலவச சந்தா, விஐ மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Here the Best and Cheapest Plan From Jio, Airtel, VI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X