நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

|

ஸ்மார்ட் போன்கள் எப்படி அனைவரை ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பிரதான ஒன்றாக மாறி வருகிறது. இந்த நிலையில் பட்ஜெட் விலை அதாவது 15000-த்துக்கு கீழ் கிடைக்கும் 32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு

ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு

இகாமர்ஸ் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளில் ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. ஸ்மார்ட் டிவிகள் பல்வேறு அளவிலும் விலையிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் 32 இன்ச்-ல் கிடைக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான மாடல்களில் பல டிவிகள் கிடைக்கின்றன.

4 கே, ஹெச்டிஆர், டால்பி சவுண்ட்

4 கே, ஹெச்டிஆர், டால்பி சவுண்ட்

இதில் 4 கே, ஹெச்டிஆர், டால்பி சவுண்ட், வைஃபை மற்றும் புளூடூத் உள்ளிட்ட சமீபத்திய அத்தியாவசிய அம்சங்களுடன் ரூ.15,000 விலையில் கிடைக்கும் 32 இன்ச் டிவி குறித்து பார்க்லாம்.

ரியல்மி வெளியிட்டுள்ள ஸ்மார்ட் டிவி

ரியல்மி வெளியிட்டுள்ள ஸ்மார்ட் டிவி

ரியல்மி வெளியிட்டுள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களில் 32 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவயானது 32 ரூ .12,999 விலையில் கிடைக்கிறது. இது 1366 × 768 பிக்சல்கள் தீர்மானத்தோடு கிடைக்கிறது. அதோடு ஆண்ட்ராய்டு வசதியோடும், குவாட் கோர் மீடியா தொழில்நுட்ப செயலியோடும் இயக்கப்படுகிறது. 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் கூகிள் அசிஸ்டென்ட், குரோம் காஸ்ட் மற்றும் ப்ளே ஸ்டோருக்கான ஆதரவு ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

எம்ஐ எல்இடி டிவி 4 ஏ ப்ரோ (ஸ்மார்ட் டிவி)

எம்ஐ எல்இடி டிவி 4 ஏ ப்ரோ (ஸ்மார்ட் டிவி)

சியோமியின் எம்ஐ எல்இடி டிவி 4 ஏ புரோ ஸ்மார்ட் டிவியானது 32 அங்குல ஹெச்டி டிஸ்ப்ளே வசதியோடு உள்ளது. இது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு உள்ளது. அம்லோஜிக் குவாட் கோர் செயலியும், ஆண்ட்ராய்டு9 அடிப்படையிலான பேட்ச்வால் ஓஎஸ் வசதியோடும் ஆதரிக்கிறது. இதில் 20W ஆடியோ வெளியீட்டு வசதியோடு ரூ .12,499-க்கு கிடைக்கிறது.

மோட்டோரோலா 32 அங்குல ஹெச்டி  எல்இடி ஸ்மார்ட் டிவி

மோட்டோரோலா 32 அங்குல ஹெச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

மோட்டோரோலாவின் 32 அங்குல ஹெச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இந்த டிவியானது ARM CA53 குவாட் கோர் செயலி, 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 20W ஆடியோ வெளியீடு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது ஆண்ட்ராய்டு செயலியிலும் இயக்கப்படுகிறது. Chromecast மற்றும் Google உதவியோடு ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா டிவியானது தற்போது ரூ .13,999-க்கு கிடைக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட் டிவி

சாம்சங் ஸ்மார்ட் டிவி

சாம்சங்கின் சீரிஸ் 4 ரேஞ்ச் 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவியானது ஹெச்டி டிஸ்ப்ளே வசதியோடு கிடைக்கிறது. இந்த டிவியானது குவாட் கோர் செயலி மற்றும் 1.25 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த டிவியானது நெட்ஃபிக்ஸ், யூடியூப், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது. இது 10W ஆடியோ வெளியீட்டு திறனோடு காட்சி புதுப்பிப்பு விகிதமானது 50Hz வசதியோடு இயக்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.13,999-க்கு கிடைக்கிறது.

எல்ஜி ஆல் இன் ஒன் எல்இடி ஸ்மார்ட் டிவி

எல்ஜி ஆல் இன் ஒன் எல்இடி ஸ்மார்ட் டிவி

எல்ஜியின் ஆல் இன் ஒன் எல்இடி 32 இன்ச் டிவியானது. குவாட் கோர் சிபியு 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி உள் சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. எல்ஜி டிவியில் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் 10W ஆடியோ வெளியீட்டோடு கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,999 என கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
here the best 32 inch smart tv under rs.15000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X