Just In
- 1 hr ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 1 hr ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 2 hrs ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 2 hrs ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
Don't Miss
- Movies
கலாஷேத்ராவில் முறைகேடு... மணிரத்னம் பட நடிகைக்கு எதிராக சிபிஐ வழக்கு
- News
தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Sports
என்னாது? டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி!
- Automobiles
7 சீட்டர் எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்த மாருதி திட்டம்... புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது!
- Lifestyle
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அறிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. மேலும் இந்தியாவில் மொபைல் ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணங்கள், அதிக வரி விதப்பு, உரிமம் பெறுவதற்கான கட்டணம் உள்ளிட்டவைகள் மிகவும் அதிகமாக உள்ளது என அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன.

தொலைத்தொடர்பு நிறுவன சிக்கல்களுக்கு காரணம்
அதேசமயத்தில், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டண தொகை அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே ஐயுசி எனப்படும் இணையதள சேவைக் கட்டணத்தில் சிக்கித் தவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது மேலும் சிக்கலை தரும்விதமாக அமைந்தது.

தொழில் போட்டி காரணமாகவே பல்வேறு ஆஃபர்கள்
2.o என்ற திரைப்படத்தில் அக்ஷய் குமார் ஒரு வசனம் பேசியிருப்பார். அதில், அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே சேவை புரிந்து வருகிறது எனவும், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் மட்டும் எதற்கு பத்துக்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவன சேவை எனவும் கேள்வி எழுப்பியிருப்பார். அதற்கேற்ப,இந்தியாவில் சேவை புரியும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தாலும் தொழில் போட்டியில் பல்வேறு சேவைகளை அறிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்!

வோடபோன் சேவை நிறுத்தப்படுவதாக பரவிய வதந்தி
இந்தியாவில் சுமார் 30 சதவீத(30 கோடி பயணாளர்கள்) பங்களிப்புடன் 3-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வோடபோன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கடந்த காலாண்டில் மட்டும் ரூ.5000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்செல் சேவை நிறுவத்தப்பட்டது போல், அடுத்ததாக பிரிட்டனைச் சேர்ந்த வோடாபோன் நிறுவனமும் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது என்று ஒரு வதந்தி பரவலாக வலம் வந்தது. அதற்கேற்பு கடன் சுமை காரணமாக இந்தியாவில் வோடபோன் நிறுவனம், ஐடியாவுடன் இணைந்தது.

அரசுக்கு கோரிக்கை விடுத்த வோடபோன் சிஇஓ
இந்நிலையில் வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வோடாபோன் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி நிக் ரீடு, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் முதலீடு வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு காரணம் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்க உரிமம் பெறுவதற்கு கூடுதல் கட்டணம், அதிக வரி, நெருக்கடியான விதிமுறைகள் என கூறினார். அதேபோல் அரசு, மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வோடபோன்
இந்தியாவில் வோடபோனின் நிலை மோசமாக இருப்பது உண்மைதான் எனவும், தற்போதை சூழலில் இந்தியாவில் வோடபோன் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுவதாக பரவும் தகவல் வதந்தி எனவும் தொடர்ந்து இந்தியாவில் வோடபோன் முதலீடு செய்யும் எனவும் அதற்கான சந்தை இந்தியாவில் இருக்கிறது எனவும் அவர் கூறினார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேறுவதாக பரவும் வதந்திக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவில் சேவை தொடரும்...
மேலும், முறையாக கடன்களை கட்டி வருவதாகவும் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுகிறது என்பது ஆதாரமற்றத் தகவல் எனவும் உறுதிப்பட கூறியுள்ளார்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790