ரிலையன்ஸ் ஜியோ எப்பவுமே பிஸியா இருக்கக் காரணம் இது தான்!
ஜியோ மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, நெட்வர்க் பிஸி என்றே வருகின்றது, இதற்குக் காரணம் யார் தெரியுமா? தெரிந்து கொள்வோமா?
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் மூலம் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது. அளவாகப் பயன்படுத்துவோரை விட அதிகளவு இண்டர்நெட் சேவைகளைப் பயன்படுத்துவோர் தான் அதிகளவு பிரச்சனையைச் சந்திக்கின்றனர்.
இவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை, ஜியோ அழைப்புகளை மேற்கொள்ள இயலவில்லை என்பதே ஆகும். பெரும்பாலான பயனர்களும் ஜியோ அழைப்புகளை மேற்கொள்ளும் போது 'அனைத்து லைன்களும் தற்சமயம் பிஸியாக உள்ளன' என்ற தகவல் கிடைத்திருக்கும்.
இண்டர்நெட் பயன்படுத்தும் போது கோளாறு என்றால் பரவாயில்லை, ஆனால் அவசரத்திற்கு மற்ற நெட்வர்க்'களுக்குக் கால் செய்யும் போது கணெக்ட் ஆகாமல் போவது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும். இது போல் அழைப்புகள் கணெக்ட் ஆகாமல் இருக்கப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பதை இங்குப் பார்ப்போமா..?

நெட்வர்க் ஆப்பரேட்டர்
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயனர்கள் தங்களது அழைப்புகளில் கோளாறு ஏற்பட்டால் உடனே நெட்வர்க் ஆப்பரேட்டர்களைக் குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில் பிஸி என்ற தகவல் வர உங்களது சிம் கார்டோ அல்லது நீங்கள் வைத்திருக்கும் கருவியோ காரணம் கிடையாது.

இண்டர்கணெக்ட்
ஜியோ மூலம் மற்ற நெட்வர்க்'களுக்குக் கால் செய்யும் போது மறு முனையில் நீங்கள் அழைக்கும் நெட்வர்க் சார்பில் அழைப்பு இணைக்கப்பட வேண்டும் இணைப்பு வழங்கப்பட்டால் உங்களது அழைப்பு இணைக்கப்படும், மாறாக வழங்கப்படாத போது உங்களது இணைப்பு ரத்தாகி விடும்.

ஆப்பரேட்டர்
ஜியோ நெட்வர்க்கில் இருந்து அழைப்பைப் பெறவோ அல்லது நிராகரிக்கவோ, அழைப்பினை பெறும் நிறுவனம் முடிவு செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட நெட்வர்க் ஆப்பரேட்டர் ஜியோ அழைப்புகளைக் கணெக்ட் செய்வது மற்றும் நிராகரிப்பது குறித்து முடிவு செய்ய முடியும். இதனால் அழைப்பினை பெறும் நிறுவனம் இன்கமிங் அழைப்புகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கட்டணம்
இதன் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ மற்ற நெட்வர்க்களுக்குக் கட்டணம் செலுத்தி ஜியோவில் இருந்து அழைப்புகளைப் பெறச் செய்ய வேண்டும். தற்சமயம் டேட்டா சேவைக்கு மட்டும் அதிக முக்கியத் துவம் வழங்கும் ஜியோ வோடபோன், ஏர்டெல், மற்றும் ஐடியா போன்ற மற்ற நெட்வர்க் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவதில்லை.

அழைப்புகள்
மற்ற நெட்வர்க்கள் பிஸியாக இருப்பதால் உங்களது இணைப்பு நிராகரிக்கப்படுவதில்லை, ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் செலுத்தாததால் உங்களது அழைப்புகள் இணைக்கப்படுவது கிடையாது.

ஜியோ அழைப்புகள்
டேட்டா சார்ந்த அழைப்புகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றிச் சீராக இணைக்கப்படுகின்றது, மாறாக மற்ற நெட்வர்க் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நெட்வர்க் கோளாறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications