ஆன்டிராய்டு எம், இது தான் கூகுளின் புதிய ஓஎஸ்
ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் பத்து சதவீத ஆன்டிராய்டு கருவிகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் அடுத்த இயங்குதளத்தினை வெளியிட தயாராகிவிட்டது. தற்சமயம் வரை ஆன்டிராய்டு எம் அல்லது ஆன்டிராய்டு 6.0 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இயங்குதளம் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்க காத்திருக்கின்றது.
ஆன்டிராய்டு எம் இயங்குதளம் குறித்து தற்சமயம் வரை கிடைத்திருக்கும் சில தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மேம்படுத்தப்பட்ட நோட்டிபிகேஷன்கள்
ஆன்டிராய்டு எம் இயங்குதளத்தில் அதிகம் மேம்படுத்தப்பட்ட நோட்டிபிகேஷன்களை எதிர்பார்க்கலாம். இம்முறை கணினியில் தெரியும் நோட்டிபிகேஷன் மொபைலில் தெரியாது, என்று கூறப்படுகின்றது.

ஸ்மார்ட் ஹோம்
புதிய ஆன்டிராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட் ஹோம் மிகவும் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் வீட்டில் இருக்கும் இணைக்கப்பட்ட கருவிகளை எங்கிருந்தும் இயக்க முடியும்.

பாதுகாப்பு
கூகுளின் ஆன்டிரஹாய்டு இங்குதளம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்ததற்கு சாட்சியாக ஃபைன்டு மை போன், கில் ஸ்விட்ச் போன்ற அம்சங்கள் முந்தைய இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இம்முறை மேலும் அதிக பாதுகாப்பை வழங்க கூகுள் காத்திருக்கின்றது என்றே தெரிகின்றது.

ஆன்டிராய்டு வியர்
ஆப்பிள் வாட்ச் ஏற்கனவே பத்து லட்சம் கருவிகளை விற்பனை செய்திருப்பதை தொடர்ந்து கூகுள் இதை மிஞ்சும் அளவு போட்டியை ஏற்படுத்த பல சிறப்பம்சங்களை வழங்கும். அதிகமாக நோட்டிபிகேஷன் மற்றும் வாய்ஸ் இன்புட் போன்றவை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியீட்டு தேதி
கூகுளின் புதிய ஆன்டிராய்டு எம் இயங்குதளம் இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications