ஆதார் குறித்து பில்கேட்ஸ் கூறியது என்ன தெரியுமா?

இந்தியாவின் ஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை. இந்த ஆதாருக்காக மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதி அளிக்கும்.

|

இந்தியாவின் ஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை. இந்த ஆதாருக்காக மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதி அளிக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த ஆதார் சேவையினை உலக நாடுகள் அறிமுகம் செய்ய வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆதார் குறித்து பில்கேட்ஸ் கூறியது என்ன தெரியுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனரான 62 வயது பில்கேட்ஸ் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது இன்ஃபோசிஸ் நிறுவனர் நந்தன் நீலகேனி அவர்களின் சீரிய முயற்சியால் இந்த ஆதாரை உலக வங்கி தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவின் இந்த டெக்னாலஜி உலகின் மற்ற நாடுகளுக்கு நிச்சயம் உதவும் என்று அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

ஆதார்

ஆதார்

ஆதார் எண்ணால் இந்தியர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்திருப்பதாகாவும், 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆதார் அமல்படுத்தியிருப்பதால் இதை உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடி என்று பெருமையாக கூறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

உலக நாடுகள் இந்த அணுகுமுறையை ஆதாரை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏனென்றால், ஆளுமை தரமானது எவ்வளவு விரைவாக நாடுகளால் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடிகிறது என்பதோடு அவர்களது மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது," என பில்கேட்ஸ் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
இதனை உலக வங்கி எல்லா நாடுகளிலும் நடைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாராலும் திருட முடியாது

யாராலும் திருட முடியாது

ஏற்கனவே ஆதார் குறித்த தகவல்களை இந்தியாவின் அண்டை நாடுகள் கேட்டறிந்து தங்கள் நாடுகளில் அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாக கூறிய பில்கேட்ஸ், ஆதார் தரவு தளம் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆதாரின் தரவுகளை அவ்வளவு எளிதில் யாராலும் திருட முடியாது என்றும் பையோமெட்ரிக் சரிபார்ப்பு இல்லாமல் ஆதாரில் மோசடி செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் மேலும் இதுகுறித்து கூறியுள்ளார்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஆதாருக்கு விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், இந்த தகவலை கொண்டு வங்கிகள் சிறப்பாக சேவை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண் பெறவும் உதவியாக உள்ளது. ஆதார் திட்டம் இன்றைய இந்தியப் பிரதமரான மோடியின் ஆட்சிக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது எனினும் இதனை ஆதரித்து அமல்படுத்திய பிரதமர் மோடிக்கே அதன் பெருமை சென்று சேரும் என்றும் பில்கேட்ஸ் கூறினார்.

பயோமெட்ரிக்

பயோமெட்ரிக்

நந்தன் நீலக்கனி அவர்களின் நல்ல நண்பன் என்ற முறையில் அவர் எடுத்துள்ள முயற்சிகள் டிஜிட்டல் உதவியுடன் கல்விக்கு உதவக் கூடியதாகவும் இருக்கும் என்று கருதுவதாக பில்கேஸ் கூறியுள்ளார். இந்த ஆதார் ஐடியாவை இதுவரை வளர்ந்த நாடுகள் கூட செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஆதார் எண் 12 இலக்க எண்களை கொண்டது. ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியம் என்று கருதப்படும் இந்த பயோமெட்ரிக் பாதுகாப்புடன் உள்ள ஆதாரை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Here's what Microsoft co-founder Bill Gates has to say on Aadhaar; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X