OTP ரகசிய எண் இல்லாமல் ரூ.17 லட்சம் திருட்டு.! எப்படி நடந்தது? போலீசார் விசாரணை
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, பணபரிவர்த்தனை தொடர்பாக சில வசதிகள் தருவதாக போன் செய்து சில ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவம் அடிக்கடி செய்திகளில் வந்துகொண்டேதான் இருக்கிறது, கண்டிப்பாக மக்கள் வங்கி சார்ந்தி விஷயங்களில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

மர்மநபர்கள்
இந்நிலையில் பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் தருவதாக போன் செய்த நபரிடம் வங்கி விவரங்களை அளித்த மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து மர்மநபர்கள் ரூ.17லட்சத்தை திருடியுள்ளனர்.

பிரகாஷ் மாகதேவ்(வயது 69)
முன்பை பகுதியை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மாகதேவ்(வயது 69) இவர் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார், மேலும் வெளிநாட்டில் வசித்து வரும் மகள் மற்றும் மகனின் வங்கி கணக்கையும் அவரே நிர்வாகித்து வந்துள்ளார். குறிப்பாக இவர் தன்னுடைய செல்போன் எண்ணையே 3கணக்குடனும் இணைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில் ஜனவரி 8-ம் தேதி பிரகாஷ்-க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது, எதிர்முனையில் பேசியநபர், தான் பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் செய்து தருவதாகவும், அதற்கு வங்கி கணக்கின்சில விவரங்களை தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

வங்கி கணக்கை முடக்கியுள்ளார்
குறிப்பாக வங்கி அதிகாரியைபோல் தெளிவாக பேசியதால் சந்தேகம் அடையாத மருத்துவர் பிரகாஷ், வங்கிக் கணக்குவிவரங்களை தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது எண்ணுக்கு ஒடிபி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் வந்துள்ளது. உடனடியாக ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த மருத்துவர், வங்கி கிளையை தொடர்பு கொண்டுவங்கி கணக்கை முடக்கியுள்ளார்.

17லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது
அதற்குபின்பு ஜனவரி 21-ம் தேதி வங்கிக்கு சென்று பிரகாஷ், கணக்கு விவரங்களை சரிபார்த்துள்ளார், அப்போதுதான்அவரது இரு கணக்கில் இருந்து மொத்தம் 17லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

காவல்நிலையத்தில் புகார்
பின்னர் அதிர்ச்சியடைந்த மருந்துவர் பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார், அதில் தான் ஒடிபி-ஐ பகிரந்து கொள்ளாதபோதும் கணக்கில் இருந்து பணம் எப்படி எடுக்கப்பட்டது என பிரகாஷ் கேள்விஎழுப்பியுள்ளார். மேலும் ஒடிபி இல்லாமல் பணபரிவர்த்தனை எப்படி நடந்தது என்ற கோணத்திலும் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications