Subscribe to Gizbot

கூகுள், நோக்கியா, சாம்சங் கொடுக்கும் நெருக்கடி - ஆப்பிளின் 2017 விஸ்வரூபம்.!

Written By:

ஆப்பிள் - இந்த கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன் வரவிருக்கும் தயாரிப்புகளைப் பற்றி கிட்டத்தட்ட எதுவுமே வாய் திறந்து பேசுவதில்லை. ஆனாலும் கூட ஆப்பிள் தயாரிப்புகள் பற்றிய வதந்திகள் மற்றும் லீக்ஸ் அறிக்கைகளுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அதை பற்றி கேட்கும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கும் ஒரே பத்தி - "கருத்து இல்லை" என்பது தான். பதில் கூறவில்லை என்பதற்காக வரவிருக்கும் ஆப்பிள் தயாரிப்புகள் வராமல் போய்விடுமா என்ன.?

அப்படியாக இந்த 2017-ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் நிறுவனம் யாரும் எதிர்பார்ப்பதாக சில அழகான பெரிய வெளியீடுகளை நிகழ்த்தவுள்ளது. அவைகள் என்னென்ன என்பதை பற்றிய இதுவரை வெளியான ஒட்டுமொத்த தகவல்களின் தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர்

ஒரு சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர்

ஆப்பிள் அதன் செயற்கை அறிவார்ந்த அசிஸ்டென்ட் சிரி ஸ்பீக்கர் சார்ந்த உருவாக்க பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது, இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் அமேசானின் எக்கோ கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது, அதாவது கூகுள் நிறுவனம் கூகுள் ஹோம் கொண்டுள்ளது போல.!

ஐபோன் 8

ஐபோன் 8

எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 கருவியின் வடிவமைப்பில் அதன் படியில் ஹோம் பொத்தான் இல்லாமல் வரும் மற்றும் எட்ஜ் டூ எட்ஜ் திரை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியாலிட்டி செயல்பாடு கொண்ட கேமரா, மற்றும் ஒரு பளபளப்பான ஐபோன் 4-எஸ்க்யூ கிளாஸ் ஆகியவைகளும் கொண்டிருக்கும் என்றும், இக்கருவி 1000 டாலர்கள் அல்லது அதற்கும் அதிகமான விலை நிர்ணயம் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ்

ஐபோன் 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ்

ஐபோன் 8 உடன், ஒரு ஐபோன் 7எஸ், 7எஸ் ப்ளஸ் வெளியாகும் என தெரிகிறது. முந்தைய ஆண்டுகளின் எஸ் வெளியீடுகளைப் போலவே, 2016-இன் ஐபோன் 7 கருவியின் அப்கிரேட் கருவியாக இது இருக்கும். மேலும் இது மலிவான ஒரு ஐபோனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பட்ட மேக்புக் ப்ரோ

மேம்பட்ட மேக்புக் ப்ரோ

2016-ஆம் ஆண்டில் ஒரு டச் பார் தொடுதிரை மூலம் மடிக்கணினியின் செயல்பாட்டு விசைகளுக்கு மாற்றாக ஆப்பிள் ஒரு சீரமைக்கப்பட்ட மேக்புக் ப்ரோ சாதனத்தை வெளியிட்டது. சிறந்த அம்சங்களுடன் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பானது வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்கள் நிறைந்த ஒரு மேக்புக்

அம்சங்கள் நிறைந்த ஒரு மேக்புக்

இதேபோல், ஆப்பிள் வரும் ஜூன் மாதத்தில் ஒரு புதிய மேக்புக்கை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது பேட்டரி ஆயுளுக்கு பதிலாக செயல்திறன் மீது கவனம் செலுத்தும் வண்ணம் வடிவமைப்பு பெறலாம்.

பூஸ்ட் அப் செய்யப்படும் மேக்புக் ஏர்

பூஸ்ட் அப் செய்யப்படும் மேக்புக் ஏர்

மேலும் வெளியான தகவலின் கீழ் ஆப்பிள் மேக்புக் ஆர் சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் வெளியாகலாம் என்றும் அறியப்படுகிறது. ஆனால் இந்த தகவல் நிச்சயமானது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஐமேக்

புதிய ஐமேக்

வரும் ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம், ஐமேக்ஸ் என்று (iMacs) என்றழைக்கப்படும் சார்பு பயனர்களுக்கான சாதனத்தை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் சார்ந்த குறிப்புகள் எதுவும் இல்லை மற்றும் குறிப்பிட்ட வெளியீட்டு தேதி சார்ந்த தகவலும் கிடையாது.

மூன்றாவது தலைமுறை ஆப்பிள் வாட்ச்

மூன்றாவது தலைமுறை ஆப்பிள் வாட்ச்

ஏப்ரல் 2015-ல் ஆப்பிள் அதன் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து செப்டம்பர் 2016-ல் சீரிஸ் 2 உடன் தொடர்ந்து ஆப்பிள் வாட்சுகள் வெளியான வண்ணம் உள்ளன. இப்பொது ஆப்பிள் அதன் மூன்றாவது வெளியீட்டை தொடங்க உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

4கே ஆப்பிள் டிவி

4கே ஆப்பிள் டிவி

இறுதியாக ஆப்பிள் தீவிரமாக 4கே எச்டி திறன் கொண்ட ஆப்பிள் டிவி சார்ந்த பணிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதில் பெரிய அளவிளாம்ப தெளிவு இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Here's everything Apple is rumoured to be launching in 2017. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot