ஜெயிலில் தரையில் படுத்துறங்கும் சாம்சங் நிறுவன பில்லியனர், ஏன் தெரியுமா.?

இவர் கதையை கேட்கும் போது "அட இதை எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே!!?" என்று உங்களுக்கு வி.கே.சி ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.!

|

நான்கு சுவற்றிற்குள் நாம் செய்யும் குற்றம் ஒரு நாள் நிச்சயமாக நம்மை கம்பிகளால் சூழப்பட்ட நான்கு சுவற்றிற்குள் அடைக்கும் என்பதற்கு நம்மிடத்தில் லட்சோப லட்சம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.!

நம்ம தமிழ் நாட்டில் நடந்த அதே மாதிரியான சம்பவம், வேறொரு நாட்டில், வேறொருவரால் நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான, அதாவது கோடி கோடியாய் கொள்ளை அடித்த கூட்டம் ஜெயிலில் தரையில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் அந்த வி.கே.சி இரண்டாம் பாகம் என்று முதலில் தோன்றலாம் ஆனால் கடைசியில் "அடப்பாவிகளா.??!" என்பது தான் ரியாக்ஷனாக இருக்கும்.!

ஜே ஒய் லீ

ஜே ஒய் லீ

பிரபல சாம்சங் நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஜே ஒய் லீ-க்கு இதுவொரு மோசமான காலம் என்றே கூறலாம். தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி பதவி நீக்கத்தின் கீழ் கேள்விகளை எழுப்பிய பல நம்பிக்கைக்கு உரிய பில்லியனர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் தான் சாம்சங் நிறுவனத்தின், ஹை-ப்ரொபைல் தலைமையாளர் ஆன ஜே ஒய் லீ.!

தரையில்

தரையில்

மூன்றாம் தலைமுறை சாம்சங் வாரிசான இவர் இப்போது 71 சதுர அடி தடுப்பு செல் சிறையில் மூலையில் ஒரு கழிப்பறை கொண்ட அறையில் தரையில் படுத்து உறங்கி கொண்டிருக்கிறார்.

"குற்றமற்ற விடயத்துக்காக"

ஜனாதிபதி பார்க் ஜியூன்-ஹவ் அணியின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து "குற்றமற்ற விடயத்துக்காக" அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிச்சிறை

தனிச்சிறை

தவிர, ஜே லீ உடன் குற்றப்பிரேரணை சம்பந்தப்பட்ட மற்ற கைதிகளுடன் இவர் பொருத்தமற்ற தொடர்புகளை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கத்தில், ஒரு கண்டிப்பான வரிசையில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

6.2 பில்லியன் டாலர்கள் சொத்து

6.2 பில்லியன் டாலர்கள் சொத்து

ஜே லீ - தென் கொரியாவில் உள்ள செல்வந்தர்களுள் ஒருவராவர், 6.2 பில்லியன் டாலர்கள் சொத்து கொண்ட இவர் சியோலில் உள்ள தனது சாதாரண 4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மாளிகையில் வாழ்ந்து வந்வர் மற்றும் சாம்சங் நுகர்வோர் மின்னணு குழுவிற்குத் தலைமை தாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறைக்கைதி

சிறைக்கைதி

என்று போதிலும், இவருக்கு எந்த சிறப்பு கவனமும் சிறையில் வழங்கப்படவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 1,443 வொன் மதிப்பிலான அதாவது 1.26 டாலர்கள் மதிப்பிலான பொதுவான அரிசி உணவுகளை சிறைக்கைதியாய் உண்டு வருகிறார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

"பாட்ஷா பாய் போல" அனில் அம்பானியின் அறியப்படாத பக்கங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Here is why Samsung’s billionaire chief is now in jail sleeping on the floor. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X