Vodafone-கிட்ட கெஞ்ச வேண்டிய சூழ்நிலை; ஆனாலும் திமிர் காட்டும் Airtel..!

|

இலவசமாக 5ஜி சிம் கார்டு கிடைக்குமா? 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும்? ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? - இப்படி 5ஜி தொடர்பான கேள்விகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது!

இதற்கிடையில் Airtel நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு, வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் "தயவு" தேவைப்படும் ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. அதென்ன சூழ்நிலை? ஏர்டெல் நிறுவனம் வோடாபோன் ஐடியாவின் தயவை கோருமா? அல்லது கெத்து காட்டுமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கெஞ்ச வேண்டிய அளவிற்கு அப்படி என்ன சூழ்நிலை?

கெஞ்ச வேண்டிய அளவிற்கு அப்படி என்ன சூழ்நிலை?

கொஞ்சம் மோசமான சூழ்நிலை தான். அதாவது சில "முக்கியமான சந்தைகளில்" (இடங்களில்) வோடபோன் ஐடியாவின் தயவு இருந்தால் மட்டுமே பார்தி ஏர்டெல் நிறுவனத்தால் நல்ல தரமான 5ஜி சேவைகளை வழங்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஏர்டெல் மற்றும் விஐ (Vi) நிறுவனங்கள் 'ஸ்பெக்ட்ரம் பகிர்வு' (Spectrum sharing) ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio-க்கு மாறிடலாமா?

ஆனாலும் Airtel கொஞ்சம் திமிராகத்தான் இருக்கிறது!

ஆனாலும் Airtel கொஞ்சம் திமிராகத்தான் இருக்கிறது!

"சில இடங்களில்" நல்ல தரமான 5ஜி சேவைகளை வழங்க விஐ நிறுவனத்தின் தயவு தேவை என்பதை நன்கு அறிந்திருந்தாலும் கூட, ஏர்டெல் நிறுவனம் இந்த சவால்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது, அதாவது "இந்த சிக்கல்கள்" மிகச் சிறிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறி உள்ளது.

ஆனால் டெலிகாம் வல்லுநர்களோ, எட்டு வட்டங்களில், சி-பேண்டின் கீழ் (அதாவது 3.3-3.4 GHz இல் இருந்து) 5G சேவைகளை பயன்படுத்துவதில் நிறைய சவால்கள் இருக்கும் என்று கூறி உள்ளனர்.

சவால்கள் என்றால்? என்ன மாதிரியான சவால்கள்?

சவால்கள் என்றால்? என்ன மாதிரியான சவால்கள்?

இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று - "சி-பேண்ட்" என்று கூறப்படும் பகுதிகளில் 5ஜி சேவைக்கான கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது சில வட்டங்களில் எல்லை பகுதிகள் (இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் - மேற்கு) உள்ளன. அங்கெல்லாம் 5ஜி-க்கான சில கட்டுப்பாடுகள் இருக்கும்!

இரண்டாவது - கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், வடகிழக்கு மற்றும் ராஜஸ்தானில் உள்ள முக்கிய இடங்களில் 30 யூனிட்களின் 5ஜி அலைக்கற்றைகள் (3.4-3.43 ஜிகாஹெர்ட்ஸ்-இல் இருந்து) கிடைக்காது.

எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 எக்கச்சக்கமான டேட்டா + OTT நன்மைகளை வழங்கும் 4 "மரண மாஸ்" பிளான்கள்!

இதற்கு ஒரே ஒரு சாத்தியமான தீர்வு தான் உள்ளது!

இதற்கு ஒரே ஒரு சாத்தியமான தீர்வு தான் உள்ளது!

அதுதான் ஸ்பெக்ட்ரம் பகிர்வு ஆகும். மேற்கூறிய இரண்டு சவால்களில், ஏர்டெல் நிறுவனத்திற்கு இருக்கும் சாத்தியமான தீர்வு என்னவென்றால், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பெரிய சந்தைகளில் 80 மெகா ஹெர்ட்ஸின் Continuous Block-ஐ உருவாக்க, சி-பேண்ட் அலைக்கற்றைகளை வோடாபோன் ஐடியா நிறுவனத்துடன் பகிர்வதே ஆகும்!

இதன் வழியாக, சி-பேண்ட் ஏர்வேவ்ஸில் (C-band Airwaves) தடையில்லாத மற்றும் தரமான 5ஜி கவரேஜை உறுதி செய்ய முடியும்!

ஆனால் Airtel இதை செய்யுமா?

ஆனால் Airtel இதை செய்யுமா?

"தலைக்கு மேல் வெள்ளம் போகாத குறை தான்" என்றாலும் கூட இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க சவால்கள் எதுவும் இல்லை என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

"விலக்கு மண்டலங்கள் (Exclusion zones) ஆனது எல்லையை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்கள் மற்றும் ஆறு சிறிய நகரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, அவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மொத்த பரப்பளவைக் காட்டிலும் மிகச் சிறிய பகுதி (மற்றும் மக்கள் தொகை) ஆகும்" என்று ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த தன்னம்பிக்கை 5ஜி அறிமுகத்திற்கு பின்னர், அதை காப்பாற்றுகிறதா? அல்லது 'பேக் ஃபையர்' செய்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Best Mobiles in India

English summary
Here is Why Airtel Needs Vodafone Idea Support to Ensure Quality 5G Coverage in Few Places

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X