Home
News

Android 14-க்கு தகுதியான Mobile-களின் பட்டியல் இதோ! உங்க போன் இந்த லிஸ்ட்ல இருக்கா?

டெவலப்பர் மாதிரி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இன் முதல் வெர்ஷன் பிப்ரவரி 2023-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடைய பீட்டா 2 வெர்ஷன் இப்போது சில ஸ்மார்ட்போன்களில் அணுக கிடைக்கிறது. இது பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

எந்த போன்களுக்கு இந்த புதிய ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன் பயன்படுத்த கிடைக்கும் என்ற விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இன் நிலையான பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் லைவ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 பதிப்பு பல UI மற்றும் அண்டர்-தி-ஹூட் மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்று நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Android 14-க்கு தகுதியான Mobile-களின் பட்டியல் இதோ! உங்க போன் இருக்கா?

Google IO 2023 நிகழ்வின் போது, ​​நிறுவனம் அதன் புதிய பயன்பாடுகள் மற்றும் சேவைகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது. வன்பொருள் அறிவிப்புகளைப் பொறுத்தவரை, நிறுவனம் கூகுள் பிக்சல் 7a (Google Pixel 7a), கூகுள் பிக்சல் டேப்லெட் (Google Pixel Tablet) மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold) ஆகியவற்றை வெளியிட்டது. கூகுள் பிக்சல் ஃபோல்ட் என்பது Google நிறுவனத்தின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும்.

மென்பொருள் பக்கத்தில், ஆண்ட்ராய்டு 14 பீட்டாவின் இரண்டாவது வெர்ஷனை கூகுள் அறிவித்தள்ளது. ஆண்ட்ராய்டு 14 டெவலப்பர் திட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 2023 இல் அறிவிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 12 அன்று, கூகிள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்ட முதல் பீட்டா வெர்ஷனை அறிவித்தது. இது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இப்போது, ​​நிறுவனம் ஆண்ட்ராய்டு 14 இன் இரண்டாவது வெர்ஷனை அறிவித்துள்ளது.

இப்போது ஆண்ட்ராய்டு-14 பீட்டா 2 ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), நத்திங் (Nothing) மற்றும் பல ஃபோன்களில் கிடைக்கிறது. தகுதியான அனைத்து Google Pixel சாதனங்களுக்கும் Android 14 Beta 2 இப்போது கிடைக்கிறது. கூடுதலாக, iQOO, லெனோவா (Lenovo), ஒப்போ (OPPO), ரியல்மி (Realme), டெக்னோ (Tecno), விவோ (Vivo) மற்றும் சியோமி (Xiaomi) போன்ற பிராண்டுகளின் சாதனங்களுக்கும் பீட்டா வெர்ஷனி தற்போது கிடைக்கிறது.

Android 14-க்கு தகுதியான Mobile-களின் பட்டியல் இதோ! உங்க போன் இருக்கா?

இரண்டாவது பீட்டா சில அண்டர்-தி-ஹூட் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பீட்டா 2 ஆனது 10-பிட் உயர் டைனமிக் ரேஞ்ச் எச்டிஆர் (HDR) படங்களுக்கான ஆதரவைச் சேர்க்கிறது. இது சென்சாரிலிருந்து கூடுதல் தகவல்களைக் கொண்டு மேலும் துடிப்பான வண்ணங்களைச் சேர்க்கிறது. HDR ஆதரிக்கப்படும் சாதனங்களில் 10-பிட் காம்ப்ரஸ்ட்டு ஸ்டில் படங்களையும் நீங்கள் எடுக்கலாம். தனியுரிமையைப் பொறுத்தவரை, Android 14 தளத்தின் ஒரு பகுதியாக Health Connect ஐ ஒருங்கிணைத்துள்ளது.

தனிப் பதிவிறக்கம் தேவையில்லாமல் Google Play சிஸ்டம் புதுப்பிப்புகள் மூலம் புதுப்பிப்புகளைப் பெறும். பயனர்கள் தங்கள் சாதனத்தில் உள்ள செட்டிங்ஸ் சென்று ஹெல்த் கனெக்டை அணுகலாம். தனியுரிமைக் கட்டுப்பாடுகள் கணினி அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 14 பயனர்களின் லொகேஷன் தகவலை மூன்றாம் தரப்பினருடன் லொகேஷன் தரவை பகிரும்போது சிறப்பித்துக் காட்டும். இனி எந்த ஆப்ஸ் எந்த தகவலை பெறுகிறது என்பது நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் அணுகலைக் கட்டுப்படுத்தலாம்.

இன்னும் பல டெவலப்பர் விருப்பங்களுடன் ஆண்ட்ராய்டு 14 இன்னும் சோதனையில் உள்ளது. இவை தவிர, ஆண்ட்ராய்டு 14 பீட்டா 2 ஐச் சுற்றி பல அறிவிப்புகள் உள்ளன, அவை இறுதி வெளியீட்டிற்குத் தயாராவதற்கு டெவலப்பர்களுடன் தொடர்புடையவை. தகுதியான போன்களின் பட்டியலைப் பொறுத்தவரை, Pixel 7a உட்பட சுமார் ஒன்பது Pixel சாதனங்கள் இதனுடன் இணக்கமாகிறது. இன்றைய நிலவரப்படி பீட்டா திட்டத்திற்குத் தகுதி பெற்ற சில ஃபோன்கள் என்றால், அது

Android 14-க்கு தகுதியான Mobile-களின் பட்டியல் இதோ! உங்க போன் இருக்கா?

கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro)
கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7)
கூகுள் பிக்சல் 7a (Google Pixel 7a)
கூகுள் பிக்சல் 6 ப்ரோ (Google Pixel 6 Pro)
கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7)
கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a)
கூகுள் பிக்சல் 5a 5ஜி (Google Pixel 5a 5G)
கூகுள் பிக்சல் 5 (Google Pixel 5)
கூகுள் பிக்சல் 4a 5ஜி (Google Pixel 4a 5G)
விவோ எக்ஸ்90 ப்ரோ (Vivo X90 Pro)
iQOO 11
நத்திங் போன் (1) (Nothing Phone (1))
டெக்னோ கேமன் 20 தொடர் (Tecno Camon 20 series) போன்கள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பிராண்டுகளின் சாதனங்களுக்கும் இப்போது ஆண்ட்ராய்டு 14 பீட்டா 2 தகுதியானவை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here is the list of Mobiles eligible for Android 14 Is your phone on this list?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X