Home
News

12 ஓடிடி, 555 சேனல்கள்.. ஜியோவுக்கு சவால் விடும் Excitel.. எந்தெந்த நகரங்களில் இதன் சேவை கிடைக்கிறது?

தற்போது இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகின்றன என்று கூறவேண்டும். அதேபோல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் தான் மொபைல், பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் வழங்குவதில் முன்னணியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் எக்ஸிடெல் எனும் புதிய பிராட்பேண்ட் நிறுவனம் மலிவு விலையில் அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது.

12 ஓடிடி,  555 சேனல்கள்.. ஜியோவுக்கு சவால் விடும் Excitel..

எக்ஸிடெல் (Excitel) நிறுவனம் மூன்று திட்டங்களை வைத்துள்ளது. முதல் திட்டம் தி கிக்ஸ்டார்ட்டர் (the kickstarter), இரண்டாவது திட்டம் தி கேபிள் கட்டர் (the cable cutter), மூன்றாவது திட்டம் தி பீஸ்ட் (the beast). இந்த மூன்று திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதிலும் தி கேபிள் கட்டர் திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது எக்ஸிடெல் நிறுவனம் எந்தெந்த நகரங்களில் தனது சேவையை வழங்கி உள்ளது என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது எக்ஸிடெல் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அம்ரோகா (amroha), பெங்களூர் (Bangalore), பீமாவரம் (bhimavaram), டெல்லி என்சிஆர் (Delhi NCR), கோரக்பூர் (Gorakhpur), குண்டூர் (Guntur), ஹைதராபாத் ((Hyderabad), ஜெய்ப்பூர் ( Jaipur), கான்பூர் ( Kanpur), லக்னோ, மங்களூர் (mangalore),மீரட் (Meerut),மும்பை (mumbai),பாட்னா, வாரணாசி (Varanasi), விசாகப்பட்டினம் (Visakhapatnam) மற்றும் சில முக்கிய நகரங்களில் இந்த எக்ஸிடெல் சேவை கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எக்ஸிடெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.592 விலையில் தி கேபிள் கட்டர் (the cable cutter) எனும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டம் 12 மாதங்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இதில் 400எம்பிபிஎஸ் வேகத்தில் 550 டிவி சேனல்களை பார்த்துக்கொள்ள முடியும். பின்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) போன்ற 12 ஓடிடி தளங்களின் ஒரு வருட சப்கிரிப்ஷன் கிடைக்கும்.

குறிப்பாக எக்ஸிடெல் நிறுவனம் வழங்கும் ரூ.592 திட்டம் மூலம் ஒரே நேரத்தில் டிவி சேனல்களையும், ஓடிடி வீடியோக்களையும் பார்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டம் குறித்து எக்ஸிடெல் சிஇஓ விவேக் ரைனா கூறியது என்னவென்றால், இது கேம் சேஞ்சர் திட்டமாக இருக்கும். அதோடு கேபிள் கட்டர் திட்டமாகவும் இருக்கும். மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகின்றன. அதேவேளையில் பாரம்பரியமாகப் பார்த்துவரும் டிவி சேனல்களின் சந்தா கட்டணமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

12 ஓடிடி,  555 சேனல்கள்.. ஜியோவுக்கு சவால் விடும் Excitel..

எனவே இவற்றை ஒரே திட்டத்தின் மூலம் மாற்ற முயற்சித்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் ஓடிடி மற்றும் டிவி சேனல்களின் சந்தாவைப் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார். அதேபோல் இந்நிறுவனம் வழங்கும் தி கிக்ஸ்டார்ட்டர் (the kickstarter) திட்டத்தில் ஆனது 200எம்பிபிஎஸ் விரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும்.

அடுத்து தி பீஸ்ட் (the beast) திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு 300எம்பிபிஎஸ் விரையிலான இன்டர்நெட் வேகம் இருக்கும். குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் தனது சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் சேவைகளை விரும்பும் பயனர்கள் excitel.com என்ற தளத்திற்கு சென்று, அங்கு பெயர், மொபைல் எண், இமெயில் மற்றும் அதில் உள்ள நகரத்தை தேர்வுசெய்தால் போதும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here is the list of cities where Excitel services are available in India: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X