தெரியுமா.? உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்னென்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும்.?

By Gizbot Bureau
|

இந்தியாவில் கிரிக்கெட்டை பற்றியும், பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்களையும் பற்றி நமக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. "சச்சின்ன்ன்ன்.. சச்சின்" என்று கூவியதில் இருந்து "தோணி தோணி" என்று அரங்கத்தை அதிர விடும் வரை கிரிக்கெட்டை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை உலகமே அறியும்.

இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!இண்டர்நெட் வேகத்தில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ.!

இப்படியாக நமது ரத்தத்தில் ஊறிப்போன கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் கிட்டத்தட்ட நம் தேசத்தின் ஹீரோக்கள் ஆவர். அவர்களை நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம் என்பதையும் நாம் அறிவோம். அவர்களின் விளையாட்டு முறைகளில் இருந்து, நுணுக்கங்களில் இருந்து ஆடைகள், வீடுகள் என அனைத்தையுமே நாம் பின்பற்றுகிறோம்.

1. விராத் கோலிக்கு.? மகேந்திர சிங் தோணிக்கு .?

1. விராத் கோலிக்கு.? மகேந்திர சிங் தோணிக்கு .?

அப்படியாக, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விளம்பரங்களில் நடித்தாலும் கூட, அவர்களுக்கே உரிய பிடித்தமான ஸ்மார்ட்போன்களை கைவசம் கொண்டுள்ளன. அதாவது விராத் கோலிக்கு என்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும்.? மகேந்திர சிங் தோணிக்கு என்ன ஸ்மார்ட்போன் பிடிக்கும் என்பதை பற்றிய கட்டுரையே இது.

2. லாவா மொபைல்களை அடிக்கடி விளம்பரப்படுத்தும் தோணி

2. லாவா மொபைல்களை அடிக்கடி விளம்பரப்படுத்தும் தோணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எல்லா காலத்திலும் மிகுந்த தூண்டுதலாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் டோனி, பெரும்பாலான இந்திய மக்களால் விரும்பப்படும் நபரான இவர் "கேப்டன் கூல்" என அன்பாக அழைக்கப்படுகிறார். ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா மொபைல்களை அடிக்கடி விளம்பரப்படுத்தும் தோணி, இந்தியாவில் லாவா மொபைல்களுக்கான உத்தியோகபூர்வ முகமாக அறியப்பட்டது

3. தனிப்பட்ட வாழ்க்கையில்

3. தனிப்பட்ட வாழ்க்கையில்

அது மட்டுமின்றி, தோணியால் தான் லாவா ஸ்மார்ட்போன் என்ற பெயர் இந்தியாவில் அதிக பிரபலமானதென்றே கூறலாம். சரி அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தோணிக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட்போன் எது என்று பார்த்தால், அவர் அடிக்கடி ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் கருவி கொண்டு செல்பீக்கள் எடுப்பதை காணமுடிகிறது. உடன் அவர் ஒரு பிளாக்பெர்ரி ரசிகரும் ஆவார்.

4. ஜியோனியின் ஒரு பிராண்ட் தூதர்

4. ஜியோனியின் ஒரு பிராண்ட் தூதர்

நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசும் போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன விராத் கோஹ்லியையும், அவரது கோபமும், திறமையும், ஆக்கிரமிப்பு தன்மையையும் சேர்க்காமல் இருக்கவே முடியாது. நாடு முழுவதும் நிறைய ரசிகர்களால் நேசிப்பதோடு பல இளைஞர்களுக்கான ஒரு பாணியான கோலி முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஜியோனியின் ஒரு பிராண்ட் தூதர் ஆவார்.

5. தனிப்பட்ட வாழ்க்கையில்

5. தனிப்பட்ட வாழ்க்கையில்

விளம்பரத்தில் நடிப்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக என்ன ஸ்மார்ட்போன் கொண்டுள்ளார் என்று பார்த்தால் உயர் இறுதியில் ஆப்பிள் ஐபோன் மற்றும் பிளாக்பெர்ரி கிளாசிக் வைத்திருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகள் உண்மையில் விராட் கோலியின் சக்திவாய்ந்த, ஸ்டைலான மற்றும் வலுவான ஆளுமையை நியாயப்படுத்துகின்றன.

6. ஒப்போ மொபைல்களுக்கான பிராண்ட் தூதர்

6. ஒப்போ மொபைல்களுக்கான பிராண்ட் தூதர்

கிரிக்கெட் ஆனாலும் சரி, சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி யுவராஜ் சிங் ஒரு உயர்ந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. கிரிக்கெட் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பல சிக்கலான போர்களை கடந்து விட்டார்.அதனாலேயே அவரும் ஒரு சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

7. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக

7. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒப்போ மொபைல்களுக்கான பிராண்ட் தூதர்களில் ஒருவரான யுவராஜ் சிங் அவ்வப்போது ஒப்போ எப்1 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் காணப்படுகிறார். இது ஒப்போவின் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்தும் மறுகையில் அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஒரு ஆப்பிள் ஐபோனை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

8. சச்சின் டெண்டுல்கர்

8. சச்சின் டெண்டுல்கர்

'கிரிக்கெட் கடவுள்'என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஐபோன் ஒன்றை பயன்படுத்துகிறார், ஆனால் அவர் ஸ்மார்டன் நிறுவனத்துடன் இணைந்த பின்னர் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்து செல்லும் நோக்கத்தின் கீழ் மாஸ்டர் பிளாஸ்டர் பெயரிடப்பட்ட எஸ்ஆர்டி (SRT) ஸ்மார்ட்போன் உருவாக்கம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

9. மற்ற கிரிக்கெட் வீரர்கள்

9. மற்ற கிரிக்கெட் வீரர்கள்

சமீபத்திய இரட்டை சதம் வரை கிரிக்கெட் உலகை மிரட்டும் இந்திய அணியின் தொடக்க வீரான ரோஹித் ஷர்மா மற்றும் மற்றொரு அதிரடி தொடக்க வீரான ஷிகார் தவான் சாம்சங் கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதை அவ்வப்போது காணமுடிகிறது. இப்போது உங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் பிடிக்குமென்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா.? ஒருவேளை நீங்களும் அக்கருவிகளை வாங்க விரும்பினால் அதன் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் வலைதளத்தோடு இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Cricket is one sport in India which accounts for a majority of ‘Hero worship.’ Our love for cricket and cricketers is something that doesn’t require any introduction. We Indians adore, worship, and follow our favourite players.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X