Home
News

காதலர் தின அன்பளிப்புக்கு சிறந்த தேர்வு இதுதான்: வாங்குறவங்க மிரண்டு போவாங்க- சிறந்த உயர்ரக ஸ்மார்ட்போன்கள்!

காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. முன்னதாக பல தளங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துவிட்டன. காதலர் தினத்திற்கு உங்கள் அன்புக்குரிய நபர்களுக்கு ஏதேனும் கேஜெட்டை பரிசளிக்க விரும்பினால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். பல ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

காதலர் தின சலுகை

காதலர் தின சலுகை

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ, விவோ எக்ஸ் 70 ப்ரோ, கூகுள் பிக்சல் 6 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 13 உள்ளிட்ட பல ப்ரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சிறந்த சலுகைகளோடு இந்த சாதனங்கள் கிடைக்கிறது. அதேபோல் இந்த காதலர் தினத்தில் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கி தங்களது அன்புக்குரியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க சரியான வாய்ப்பாகும்.

ஒன்பிளஸ் 9 ஆர்டி

ஒன்பிளஸ் 9 ஆர்டி

ஒன்பிளஸ் 9 ஆர்டி சாதனத்தின் விலை ரூ.42,999 ஆக இருக்கிறது. இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.62-இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12, டூயல் நானோ சிம் ஆதரவு, 50 எம்பி, 16 எம்பி மற்றும் 2 எம்பி பின்புற கேமரா வசதி, 16 எம்பி முன்புற செல்பி கேமரா வசதி உள்ளிட்டவையோடு வருகிறது. இரட்டை 4ஜி வோல்ட்இ, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ

ஒன்பிளஸ் 9 ப்ரோ

ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.60999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் (1440 x 3216 பிக்சல்கள்) குவாட் எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 ஆக்சிஜன் ஓஎஸ் 11, டூயல் நானோ சிம், 48 எம்பி + 50 எம்பி+ 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கிறது.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ

கூகுள் பிக்சல் 6 ப்ரோ

கூகுள் பிக்சல் 6 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.67,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வருகிறது. இந்த சாதனம் வளைந்த பிஓஎல்இடி எல்டிபிஓ டிஸ்ப்ளே வசதியோடு கூகுள் டெசன்சார் செயலி அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் டைட்டான் எம் 2 பாதுகாப்பு சிப், 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி + 12 எம்பி + 48 எம்பி பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 11 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜி வோல்ட்இ வசதியோடு வருகிறது.

விவோ வி23 ப்ரோ 5ஜி

விவோ வி23 ப்ரோ 5ஜி

விவோ வி23 ப்ரோ 5ஜி சாதனத்தின் விலை ரூ.38,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.56 இன்ச் (2376 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் அளவுடன் வருகிறது. இது ஃபன்டச் ஓஎஸ் 12 உடனான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் நானோ சிம் ஆதரவு, 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா, பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் யூஎஸ்பி வசதியோடு வருகிறது. இது இரட்டை 4ஜி வோல்ட்இ, 4300 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (2400 × 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியோடு வருகிறது. இது 8 ஜிபி ரேம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன்யூஐ 3.1 ஆதரவோடு வருகிறது. இது டூயல் நானோ சிம் ஆதரவு வசதியை கொண்டுள்ளது. 12 எம்பி + 8 எம்பி + 12 எம்பி பின்புற கேமரா மற்றும் 32 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ரூ.54,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி ஓ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவை கொண்டுள்ளது. இது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு, 12 எம்பி +12 எம்பி + 8 எம்பி பின்புற கேமரா அமைப்போடு 32 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Here is a list of the best premium smartphones that can be gifted for Valentine's Day 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X