சிறந்த 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள்: பிஎஸ்என்எல், ஏர்டெல் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ!

|

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு பல 4ஜி தரவுத் திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை இந்தியா முழுவதும் பிரபலமான தொலைத்தொடர்பு பிராண்டுகளாக இருக்கிறது. பிஎஸ்என்எல்-க்கு இந்தியா முழுவதும் 4ஜி சேவை இல்லை என்றாலும் அதன் திட்டங்கள் 4ஜி சேவைகளுடனே வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்குகளுடன் பல இடங்களில் சேவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் தளங்களில் கிடைக்கும் 4ஜி டேட்டாத் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் மினி16 திட்டம்

பிஎஸ்என்எல் மினி16 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். பிஎஸ்என்எல் மினி16 திட்டமானது 4ஜி டேட்டா வவுச்சர் பிளான் ஆகும். இந்த திட்டமானது ரூ.16 என்ற விலையில் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒரு நாள் செல்லுபடியாகும் அளவில் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் சி-டேட்டா56 வவுச்சர் ஆனது ரூ.56 விலையில் கிடைக்கும் திட்டமானது 10 ஜிபி இலவச டேட்டா மற்றும் 10 நாட்களுக்கான ஜிங்க் மியூசிக் அணுகலும் கிடைக்கின்றன.

18 நாட்கள் செல்லுபடியாகும் எஸ்டிவி-97 திட்டம்

18 நாட்கள் செல்லுபடியாகும் எஸ்டிவி-97 திட்டம்

அதேபோல் எஸ்டிவி-97 திட்டமானது 18 நாட்கள் செல்லுபடியாகும். இது 2 ஜிபி தினசரி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் டேட்டா டபிள்யூ எஃப்எச்-151 மற்றும் டேட்டா-டபிள்யூ எஃப்எச்-251 ஆகிய இரண்டு திட்டங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகையோடு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பிஎஸ்என்எல் ரூ.151 4ஜி டேட்டா வவுச்சர் இலவச ஜிங் அணுகலுடன் 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.251 வவுச்சர் இலவச ஜிங் அணுகலுடன் 70 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ட்ரூலி அன்லிமிடெட்-398

ட்ரூலி அன்லிமிடெட்-398

இறுதியாக ட்ரூலி அன்லிமிடெட்-398 ஒரு சிறப்பு திட்டமாகும். இது பயனர்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்குகிறது. இது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.398 செல்லுபடியாகும் காலம் 35 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 4ஜி தரவுத் திட்டங்கள்

ஏர்டெல் 4ஜி தரவுத் திட்டங்கள்

பாரதி ஏர்டெல் பல்வேறு விலைப்பிரிவுகளில் 4ஜி டேட்டா திட்டங்களை வழங்குகிறது. குறைந்த விலை வவுச்சர் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.48, ரூ.89, ரூ.98 மற்றும் ரூ.251 என்ற விலையில் திட்டங்களை வழங்குகிறது. ரூ.48 டேட்டா திட்டத்தில் பாரதி ஏர்டெல் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.89 திட்டத்தில் 6ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.98 திட்டமானது 12ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்றும் ரூ.251 திட்டங்களில் நிறுவனமம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ரூ.89 திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ உடனான இலவச சந்தாவை வழங்குகிறது.

பண்டிகை கால திட்டம்

பண்டிகை கால திட்டம்

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்ட பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7 முதல் நவம்பர் 8 வரை ஒரு மாதம் நீடிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்திருக்கிறது. சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களாக ரூ.247, ரூ.398 மற்றும் ரூ.499 விலையில் கூடுதல் செல்லுபடியாகும் திட்டங்களை அறிவித்திருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் 50 ஜிபி டேட்டா போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வழங்குகிறது. இதன் டேட்டா வேகம் 80 கேபிபிஎஸ் ஆக இருக்கும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள், பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஈரோஸ் நவ் ஸ்ட்ரீமிங் நன்மைகளோடு வருகிறது. கூடுதல் செல்லுபடியாகும் நன்மைகளுடன் இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

கூடுதல் டேட்டா சலுகைகள்

கூடுதல் டேட்டா சலுகைகள்

கூடுதல் டேட்டா சலுகையுடன் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.485 மற்றும் ரூ.499 ஆக இருக்கிறது. இது தினசரி 0.5 ஜிபி மற்றும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டங்கள் செல்லுபடியாகும் காலம் முழுவதும் தினசரி 1.5 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. பிஎஸ்என்எல் கூடுதல் செல்லுபடியாகும் காலம் மற்றும் கூடுதல் தரவு நன்மைகளுடன் வருகிறது. ரூ.499 திட்டம் மிகவும் நன்மை பயக்கும் திட்டமாகும். பண்டிகை கால சலுகையாக இந்த திட்டம் 35 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதோடு இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுகிறது. ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, எஃப்யூபி நன்மைகளுடன் 40 கேபிபிஎஸ் ஆக குறைத்து வழங்கப்படுகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்கள் நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Here is a list of the best 4G recharge plans offered by BSNL and Airtel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X