WhatsApp 2020: ஸ்டேட்டஸ்-ல் விளம்பரம், வாட்ஸ் ஆப் ஆன்லைன் பேமெண்ட்- இன்னும் என்னென்ன தெரியுமா?

|

வாட்ஸ் ஆப், அறிமுகம் செய்த நாளில் இருந்து தற்போது வரை அதன் வளர்ச்சி என்பது யூகிக்கி முடியாத ஒன்று. வாட்ஸ் ஆப் என்பது பிரதானமான ஒன்றாக இருந்தாலும், அனைத்து தரப்பினருடம் அதை முக்கியமான ஒன்றாக மாற்றிவிட்டாலும், நிறுவனம் தொய்வடையவில்லை.

புத்தம் புதிய அப்டேட்

புத்தம் புதிய அப்டேட்

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாட்ஸ் ஆப், தங்களது வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய அப்டேட்டுகளை வழங்கி கொண்டே இருக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்-ல் நேரடியாக பேஸ்புக் ஸ்டோரியாக மாற்றிக் கொள்ளலாம்.

பல புதிய அம்சங்கள் சோதனை

பல புதிய அம்சங்கள் சோதனை

அதன்படி 2020 ஆம் ஆண்டில் பல புதிய அம்சங்கள் வாட்ஸ் ஆப்பில் இணைய உள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட டார்க் மோட், இந்த டார்க் மோட் இந்த வாட்ஸ் ஆப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை ios மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

டார்க் மோட் அம்சம்

டார்க் மோட் அம்சம்

டார்க் மோட் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டார்க் தீம் என்க்ரீயா பெயரின் கீழ் இந்த அப்டேட் அறிமுகமாக உள்ளது. இந்த அப்டேட் ஆனது வாட்ஸ் ஆப் தங்களது வாடிக்கையாளர்களை லைட் மோட் அல்லது டார்க் மோட் ஆகியவையை தேர்வு செய்ய உதவுகிறது.

தானாக சுழலும், சுவரில் மாட்ட வேண்டாம் ஒட்டி கொள்ளலாம்: விற்பனைக்கு வரும் சாம்சங் புதிய டிவிதானாக சுழலும், சுவரில் மாட்ட வேண்டாம் ஒட்டி கொள்ளலாம்: விற்பனைக்கு வரும் சாம்சங் புதிய டிவி

தானாக அழியும் குறுஞ்செய்திகள்

தானாக அழியும் குறுஞ்செய்திகள்

அது எப்படி தானாக அழியும் அம்சம், அதான் முன்னதாகவே டெலிட் ஆல் மெசேஜ் உள்ளதே. இதன்மூலம் மெசேஜ்களை அனுப்புநர், பெறுநர் ஆகிய இருவருக்கும் தெரியாமல் அழிக்கும் முறை அமலில் உள்ளதே என்று தெரியலாம். ஆனால் இந்த மெசேஜ் சற்று வித்தியாசமானது.

ஆதாரமே இல்லாமல் அழிந்துவிடும் மெசேஜ்

ஆதாரமே இல்லாமல் அழிந்துவிடும் மெசேஜ்

இந்த அப்டேட்டின் மூலம் தங்கள் மெசேஜை அனுப்பப்பட்ட சில நிமிடத்திலேயே தாமாக மறைந்து விடும். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் வாட்ஸ் ஆப், டெலிட் ஆல் மெசேஜ் போன்று எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்காது. அதுவாகவே அழிந்து விடும். இந்த அம்சமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப் Add

வாட்ஸ் ஆப் Add

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் தற்போது நேரடியாக அதை பேஸ்புக் ஸ்டோரியாக மாற்றும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை ஓபன் செய்து பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வரும் வகையில் எதிர்கால திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளம்பரங்களின் மூலம் வணிகர்களை நுகர்வோர்களுடன் எளிதாக இணைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டேட்ஸில் அட்வர்டைஸ்மென்ட்

ஸ்டேட்ஸில் அட்வர்டைஸ்மென்ட்

வாட்ஸ் ஆப் செயலி வளர்ச்சி பிரமிக்க வைத்தாலும் நிறுவனத்துக்கான வரவு என்று பார்க்கையில் அந்த அளவு இருப்பதாக கணக்கு தெரியவில்லை இந்த நிலைியல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் விளம்பங்களின் மூலம் பொருள் ஈட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா?அலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா?

வாட்ஸ் ஆப் பேமெண்ட்

வாட்ஸ் ஆப் பேமெண்ட்

டிஜிட்டல் இந்தியாவின் ஒருகட்டமாக பண பரிவர்த்தனையை ஆன்லைனில் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றி அடைந்தது என்றே கூறலாம். அதன்படி கூகுள் பே, போன் பே, அரசு செயலியான பீம் ஆப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இருந்தாலும் வாட்ஸ் ஆப் மூலம் பேமெண்ட் செய்வதற்கான முயற்சியை அந்த நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன்படி இந்த முறை 2020-ல் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Here are the upcoming whatsapp features!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X