Home
News

Google 2020: 2020 இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது எது தெரியுமா?- டாப் 10 பட்டியல்

அனைத்து ஆண்டையும் போல் இந்த 2020 அமையவில்லை என்றே கூறலாம். கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அனைவருக்குமான இணைப்பாக சமூகவலைதளம் அமைந்தது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வீட்டில் முடங்கி இருந்த பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை இணையத்திலும், கேம்கள் விளையாடுவதிலும் செலவிட்டனர். அதன்படி இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய வார்த்தைகள் குறித்து பார்ப்போம்.

2020 இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது எது தெரியுமா?- டாப் 10

கூகுள் தேடலில் டாப் 10 டிரெண்டிங் குறித்து பார்க்கையில் இதில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் வார்த்தைகள் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இல்லை. காரணம் முதல் இடத்தில் இந்திய ப்ரீமியர் லீக்(ஐபிஎல்), இரண்டாவது இடத்தில் கொரோனா வைரஸ் ஆகியவையாகும்.

அடுத்தடுத்த இடங்கள் உள்ள வார்த்தைகள் குறித்து பார்க்கலாம். அது அமெரிக்க தேர்தல் முடிவுகள், பிரதமர் கிசான் யோஜனா, பீகார் தேர்தல் முடிவுகள், டெல்லி தேர்தல் முடிவுகள், தில் பெச்சாரா, ஜோ பிடென், லீப் நாள், அர்னாப் கோஸ்வாமி ஆகிய வார்த்தைகள் ஆகும்.

அதேபோல் 2020 ஆம் ஆண்டில் டிரெண்டிங்கில் இருந்த திரைப்படங்கள் குறித்து பார்க்கையில், தில் பெச்சாரா, சூரரைப்போற்று, தனாஜி, சகுந்தலா தேவி, கஞ்சன் சக்சேனா, லட்சுமி, சடக் 2, பாகி 3, எக்ஸ்டிராக்ஷன், குலாவோ சீதாபோ ஆகிய படங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

2020 ஆம் ஆண்டில் டிரெண்டிங்கில் இருந்த ஆளுமைகள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் குறித்து பார்க்கையில், இதில் ஜோ பிடென், அர்னாப் கோஸ்வாமி, கனிகா கபூர், கிம் ஜாங் அன், அமிதாப் பச்சன், ரஷீத்கான், ரியா சக்ரபோர்த்தி, கமலா ஹாரிஸ், அங்கிதா லோகண்டே, கங்கனா ரனாவத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

2020 ஆம் ஆண்டில் செய்முறை தேடல் குறித்து பார்க்கையில், பன்னீர் செய்வது எப்படி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி, டல்கோனா காபி செய்வது எப்படி, பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி, சானிடைஸர் வீட்டில் செய்வது எப்படி, ஃபாஸ்ட்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி, கொரோனா வைரஸை தடுப்பது எப்படி, இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி, ஜிலேபி செய்வது எப்படி, வீட்டில் கேக் செய்வது எப்படி போன்ற செய்முறை தேடல்கள் இடம்பெற்றுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here Are The Most Searched Words On Google In 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X