பிரபலமான Google Doodle கேம்கள்- எப்படி விளையாடுவது தெரியுமா?
கூகுளின் டூடுல்ஸ் விளையாட்டுகளில் பிரபலமானவை குறித்தும் அதை விளையாடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்க்கலாம். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நிலையில் நேரத்தை எளிதாக செலவிட இது சிறந்த வழியாகும்.

கூகுளின் "டூடுல்ஸ் உடன் வீட்டில் இருங்கள்" என்ற முயற்சி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த டூடுல்கள் சுய தனிமைப்படுத்துபவர்களுக்கும், வீட்டில் நேரத்தை செலவிடுபர்களுக்கும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் டூடுல் கேம்களை எவ்வாறு விளையாடுவது?
டூடுல் விளையாட்டை விளையாட விரும்புவர்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
இணைய தேடலில் கூகுள்.காம்-ஐ திறக்கவும்
காண்பிக்கப்படும் கூகுள் லோகோவைக் கிளிக் செய்ய வேண்டும். இதில் டூடுல் கேம்ஸ் என்ற வார்த்தையை தேட வேண்டும்
இதில் காண்பிக்கப்படும் கேம்களை நீங்கள் தேர்ந்தெடுத்து விளையாடலாம்.
இதில் குறிப்பிடப்பட்ட சிறந்த கேம்களை குறித்து பார்க்கலாம்.
1. கோடிங் கேரட்ஸ்
2. கிரிக்கெட்
3. ஃபிஷ்ஷின்சர்
4. ராக்மோர்
5. கார்டன் க்னோம்
6. ஸ்கோவைல்
7. லோட்டெரியா
8. ஹாலோவென் 2016
9. ஹிப் ஹாப்
10. பேக் மேன்


Click it and Unblock the Notifications