ஸ்மார்ட்போனில் உள்ள Airplane Mode.. இவ்வளவு விஷயத்துக்குப் பயன்படுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய தொழில்நுட்பம் கொண்ட போன்களை அறிமுகம் செய்கின்றன. அதுவும் இப்போது வரும் போன்கள் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் பயனர்கள் ஏரோபிளேன் மோட் (Airplane Mode) பற்றி நன்கு தெரிந்திருந்து வைத்திருக்க வேண்டும்.
அதாவது ஏரோபிளான் மோட் என்பது விமானத்தில் பயணம் செய்யும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய அம்சம் இல்லை. இது உங்கள் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த முடியும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பேட்டரி பாதுகாப்புக்கு உதவும்
உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட நேரம் நீடித்திருக்க ஏரோபிளேன் மோட்(Airplane Mode) பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக உங்கள் போனின் பேட்டரியை உறிஞ்சும் அப்ளிகேஷன்களை இது திறம்பட கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஏரோபிளேன் மோட் வசதியை ஆன் செய்வதன் மூலம் வைஃபை (Wi-Fi), மொபைல் டேட்டா (Mobile Data), புளூடூத்(Bluetooth) போன்ற அனைத்து தகவல் தொடர்பு செயல்பாடுகளையும் முடக்குகிறது. பின்பு உங்கள் போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது இது கண்டிப்பாக மிகவும் உதவியாக இருக்கும்.
சார்ஜிங் வேகம்
ஒருவேளை உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரி முற்றிலும் தீர்ந்துபோகும் போது, அதாவது 1 சதவீதம் 2 சதவீதம் சார்ஜ் மட்டும் சார்ஜ் இருந்தால், அதை உடனடியாக சார்ஜ் செய்ய ஒரு சிறந்த வழி, உங்கள் போனை சார்ஜ் போடுவதற்கு முன்பு, அதனை ஏரோபிளேன் மோடுக்கு மாற்றுவது மிகவும் நல்லது.
பல்வேறு ஆய்வுகளின்படி, ஏரோபிளேன் மோடில் போன்கள் 4 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம் அறிவிப்புகளைச் சரிபார்ப்பது, அப்டேட்கள் (updates) தேடுவது மற்றும் நெட்வொர்க்குகளுடன் (networks) இணைப்பது போன்ற பல செயல்பாடுகளை போன் செய்வதில்லை. எனவே தான் ஸ்மார்ட்போன் அதிவேகமாக சார்ஜ் ஆகிறது.
கதிர்வீச்சு மற்றும் டேட்டா
போனின் கதிர்வீச்சு உடல்நலக் கேடு விளைவிக்குமா என்பது விவாதத்திற்குரியது. ஆனாலும் இந்த ஏரோபிளேன் மோடை ஆன் செய்வதன் மூலம் உங்களது போனின் கதிர்வீச்சு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். அதேபோல் நீங்கள் ஒரு லிமிடெட் டேட்டா பிளானில் (limited data plan) ரீசார்ஜ் செய்திருந்தால், இந்த ஏரோபிளேன் மோடை ஆன் செய்வது உங்கள் டேட்டா பயன்பாட்டை நிர்வகிக்கவும், எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்கவும் உதவும்.

டிஜிட்டல் உலகத்தில் இருந்து விலகி இருக்க உதவும்
வார இறுதி நாட்களில் அல்லது சில முக்கிய நேரங்களில் இந்த டிஜிட்டல் உலகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றாலோ, அன்புக்குரியவர்களுடன் இருக்க வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றாலோ இந்த ஏரோபிளேன் மோட் உதவும்.
நமது முக்கியமான வேலை, படிப்பு அல்லது கிரியேட்டிவ் ப்ராஜெக்ட் என எதுவாக இருந்தாலும் கவனச்சிதறல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த கவனச்சிதறல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த ஏரோபிளான் மோட் ஒரு நல்ல கருவியாக இருக்கும். குறிப்பாக இணைய இணைப்பை துண்டிப்பதன் மூலம் நீங்கள் எளிதாக குறிப்பிட்ட பணியில் கவனம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications