வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
இந்தியாவில் தற்போது ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின் கிடைக்கின்றன. அதேபோல் இந்த வாஷிங் மெஷின் நமது தினசரி வேலையைக் குறைக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக ஆடையில் உள்ள அழுக்கை நீக்க நாம் செலவு செய்யும் காலத்தை இன்று வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைததுவிட்டன.
இப்போது வாஷிங் மெஷின்கள் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகி விட்து. காரணம் என்னவென்றால், இதன் வேலை மிகவும் அவசியமாகவும், அதிகமாகவும் இருப்பது தான். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது வாஷிங் மெஷின் அடிக்கடி பழுதாகி விடாமல் இருக்க சில எளிள குறிப்புகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லிக்விட் பயன்படுத்துவது நல்லது
வாஷிங் மெஷனில் முடிந்த வரை பவுடர் போடமல் வாஷிங் லிக்விட் பயன்படுத்துவது நல்லத. அதாவது பவடர் சேர்த்து துவைக்காமல் வாஷிங் லிக்விட் சேர்த்து துவைத்தால் மெஷன் அதிக நாட்கள் உழைக்கும். பின்பு வாஷிங் மெஷினில் லிக்விட் ஊற்றத் தனியாக ஒரு பாகம் இருக்கும். இதை மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அந்த இடம் உப்புக்கறை படிந்து சீக்கிரம் பழுதடைந்து விட வாய்ப்பு உள்ளது.
திறந்து வைக்க வேண்டும்
வாஷிங் மெஷினை பகல் நேரங்களில் திறந்து வைக்க வேண்டும். அப்போது தான் அதில் வாடை வராமல் இருக்கும். குறிப்பாக இரவில் மட்டும் மூடி வைத்தால் போதும். குறிப்பாக வாஷிங் மெஷினில் டப் கிளீனர் என்ற விருப்பம் இருக்கும். இந்த முறையைப் பயன்படுத்த மாதம் ஒரு முறை வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் வாஷிங் மெஷினில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

முக்கால் பாகம் போதும்
குறிப்பாக வாஷிங் மெஷனில் நீங்கள் துணி போடும் போது மெஷினின் முழு அளிவிற்கு போடாமல், முக்கால் பாகம் வரை போட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக மெஷின் முழுவதும் துணி போடவே கூடாது. அதேபோல் வாஷிங் மெஷினில் ட்ரம் மேலே பெல்ட் பகுதி இருக்கும். அங்கு டூத் பிரஷை வைத்து அடிக்கடி சுத்தம் செய்யவது நல்லது. குறிப்பாக அந்த இடங்களில் அழுக்கு படிந்து மெஷின் ஓடாமல் நின்றுவிட வாய்ப்பு உள்ளது.
மோட்டார் பாதுகாப்பு?
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை துணிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது ஒரு முறை துவைத்த பிறகு குறைந்தது அரைமணி இடைவெளி விட்டு அடுத்த முறை துணி போட வேண்டும். அதாவது இடைவெளி விடாமல் தொடர்ந்து துணிகளைப் போட்டு கொண்டே இருந்தால் வாஷிங் மெஷினின் மோட்டார் பழுதடைந்து விடும்.
டாப்லோட் மெஷின்
நாம் அழுக்கு அதிகம் உள்ள துணிகளை ஊற வைத்து பிறகு தான் மெஷினில் போடுவோம். அப்படி போடும் போது துணிகளில் ஈரம் நன்றாகப் பிழிந்து பிறகு தான் மெஷினில் சேர்க்க வேண்டும். குறிப்பாக டாப்லோட் மெஷின்களில் பெரிதாகப் பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால் ஃப்ரண்ட் லோடு பயன்படுத்தும் பயன்கள் அப்படி ஈர துணியை போடும் போது சில சமயம் மெஷின் சுற்றமால் நின்றுவிடும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

நாணயங்கள்
அதேபோல் தவறுதலாக ஆடையில் சாவி, நாணயங்கள் போன்ற உலோகங்களை வைத்து அப்படியே துவைக்கப் போட்டால், வாஷிங் மெஷினின் செயல்பாட்டை அதிகமாகப் பாதிக்கும். எனவே இவற்றை முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோல் வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும் முன்பு அவற்றில் ஏதாவது இருக்கிறதா என்பதைக் கவனமான பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








