Home
News

அடச்சே.. தேவை இல்லாம பயந்துட்டோமே.. ஓவர்ஹீட் ஆகும் மொபைலை டக்னு கூல் ஆக்கும் சிம்பிள் ஐடியா!

இந்தியாவில் முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒரு சில போன்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தான் வெளிவருகின்றன. ஆனாலும் சில சமயங்களில் போன் சூடாவது போன்ற சில சிக்கல்கள் வரும்.

அதாவது ஸ்மார்ட்போன் சூடானால் அது போனின் செயல்பாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். பின்பு போனை பயன்படுத்துவதற்கே சிரமமாக இருக்கும். முக்கியமான ஸ்மார்ட்போன் சூடானால் பேட்டரியின் ஆயுட்காலம் நிரந்தரமாகக் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகள் தான் நமது ஸ்மார்ட்போனை அதிக சூடாக்குகிறது.

ஓவர்ஹீட் ஆகும் மொபைலை டக்னு கூல் ஆக்கும் சிம்பிள் ஐடியா!

குறிப்பாக ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன் எந்த வகை போன் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சனை அனைவருக்கும் பொதுவாக காணப்படும். எனவே முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் ஏன் சூடாகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு நாம் செய்யக்கூடிய தவறுகளை எப்படி தவிர்க்கலாம் என்பதைச் சற்று விரிவாகப் இப்போது பார்க்கலாம்.

சூரிய ஒளி: ஸமார்ட்போன் வெப்பமடைவதற்கான பொதுவான காரணம் என்னவென்றால், சூரிய ஒளி நேரடியாக ஸ்மார்ட்போனில் படுமாறு வைப்பது தான். குறிப்பாக உங்களது போனை சிறிது நேரம் வெயிலில் வைத்தால் கூட போனின் பேட்டரி மற்றும் செயல்திறன் போன்றவற்றில் அதிக பாதிப்புகள் வரும் எனவே சூரிய ஒளி இல்லாத இடத்தில் போனை வைப்பது மிகவும் நல்லது.

ரேம்: உங்களது போனின் ரேம் (RAM)-இல் அதிக இடத்தை பிடிக்கும் வகையிலான செயலிகளையோ அல்லது கேம்ஸ்களையோ வைத்திருந்தால் கூட போன் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரேம் அளவைப் பொறுத்து குறைந்த செயலிகளை போன்களில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் லைட் வெர்ஷன் செயலிகளை போன்களில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அப்டேட் முக்கியம்: ஸ்மார்ட்போனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக உங்களது போனை முதல் முறை அப்டேட் செய்யும் போது கொஞ்சம் சூடாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் போனை அப்டேட் செய்தால் சிறந்த செயல்திறன் கிடைக்கும். பின்பு போனில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறையும்.

வைரஸ் தாக்குதல்: அதிக தரத்தில் உள்ள வீடியோக்களை நீண்ட நேரம் பார்த்தாலும் உங்களது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். பின்பு போனில் வைரஸ் தாக்குதல் அல்லது போலியான செயலிகள் இருந்தால் செயல்திறன் பாதித்து சூடாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஓவர்ஹீட் ஆகும் மொபைலை டக்னு கூல் ஆக்கும் சிம்பிள் ஐடியா!

வெப்பநிலை: பொதுவாக ஸ்மார்ட்போனின் வெப்பநிலை 0 முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் உங்களது போன் சூடானால் அதை உடனே சரி செய்யுங்கள். அதேபோல் உங்கள் போன் அடிக்கடி சூடாகும் என்றால், வெயில் காலத்தில் போனில் உள்ள சில அம்சங்களை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது ஜிபிஎஸ், மேப், டிராக்கிங் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பேக் கவர்: உங்களது ஸ்மார்ட்போனுக்கு பேக் கவர் பயன்படுத்தினால், சிறிது நேரத்திற்கு அதை அக்கற்றுவது நல்லது. அதாவது இதன் மூலம் உங்களது போன் சூடாவது கொஞ்சம் குறையும். அதேபோல் போன் பயன்படுத்தாத நேரத்தில் சில செயலிகள் பேக்கரவுண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதனால் கூட நமது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. மேலும் போனில் பேட்டரி சேவ் மோடை ஆக்டிவேட் செய்து பயன்படுத்துவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Here are simple tips to prevent your smartphone from overheating : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X