Home
News

இனி SIM கார்ட்டை ஆக்டிவ் ஆக வைக்க அதிகம் செலவாகும்.. இனி Jio, Airtel, Vodafone-ல் இதுதான் பேஸிக் ரீசார்ஜ்!

இனி வரும் நாட்களில், ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய 2 நிறுவனங்களின் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுமே தங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் சிம் கார்டுகளை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்!

ஏனென்றால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் ஆகிய 2 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே தங்கள் ஆரம்ப நிலை ப்ரீபெய்ட் திட்டங்களை (அதாவது இருப்பதிலேயே மலிவான விலை நிர்ணயம் கொண்ட பேஸிக் ரீசார்ஜ்களை) நிறுத்தி உள்ளன.

இனி Jio, Airtel, Vodafone-ல் இதுதான் பேஸிக் ரீசார்ஜ்!

அறியாதோர்களுக்கு, தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் சில கூடுதல் நன்மைகளை வழங்கிய ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 பிளான் நீக்கப்பட்ட வேகத்தில், ஏர்டெல் நிறுவனமும் அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆன ரூ.249 பிளானை நிறுத்தி உள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் இந்த நடவடிக்கை - இவ்விரு டெலிகாம் நிறுவனங்களுக்கான ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கும் மறுகையில், பட்ஜெட் விலை வாசிகளை, சாமானிய மக்களை - விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் தள்ளுகிறது.

இந்த சூழ்நிலையில் - ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் விஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களின் கீழும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஆரம்ப நிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ஜியோ: இனி ரிலையன்ஸ் ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இனிமேல் ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இல்லை. இதற்கு அடுத்தபடியாக ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

ஏர்டெல்: இனி பார்தி ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவை போலவே இனி ஏர்டெல்லின் கீழும் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இருக்காது. இதற்கு அடுத்தபடியாக ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது மொத்தம் 50ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா: விஐ நிறுவனம் அதன் பேஸிக் திட்டங்களில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. வோடாபோனின் பேஸிக் ரீசார்ஜ் ஆக ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் நீடிக்கிறது. இது டெய்லி 1 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஆக இப்போதைக்கு 1ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும் ஒரே தனியார் டெலிகாம் நிறுவனம் வோடாபோன் ஐடியா தான்!

ரூ.299 க்கு அடுத்தபடியாக வோடாபோன் ஐடியாவிடம் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக ரூ.408 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது டெய்லி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

ஆரம்ப நிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ரத்து செய்வது, இந்தியாவின் நம்பர்.1 தொலைத்தொடர்பு ஆபரேட்டர் என்கிற பெருமையை பெறுவதற்காக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இடையேயான போட்டியை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. வரும் நாட்களில்.. இன்னும் நீளமான வேலிடிட்டி உடன் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Here After These are the Basic Recharge SIM Active Plan For Jio Airtel Vodafone Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X