இனிமேல்.. 28 நாட்களுக்கு ரூ.20.. 84 நாட்களுக்கு ரூ.50 அதிகமா கொடுக்கனும்.. Vodafone Idea ஆட்டம் ஆரம்பம்!
ஜூலை 3 ஆம் தேதி முதல்.. ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்கள் மீது அறிவிக்கப்பட்ட கட்டண விலை உயர்வு அமலுக்கு வந்த நிலைப்பாட்டில்.. வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகள் இன்று (ஜூலை 4 ஆம் தேதி) முதல் உயர்த்தப்பட்டு உள்ளன. இப்போது விஐ (Vi) திட்டங்களின் விலைகள் மாறிவிட்டதால், உங்களுக்கான சிறந்த வோடபோன் ஐடியா திட்டம் எது என்பதை கண்டுபிடிப்பதில் சில குழப்பங்கள் ஏற்படலாம்.
அந்த குழப்பத்தை தீர்க்கும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள். என்னென்ன விஐ ப்ரீபெய்ட் திட்டங்கள் (Vi Prepaid Plans) மீது எவ்வளவு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது? அவைகள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? விலை உயர்விற்கு பின்னர், அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் எந்த திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்? போன்ற விவரங்கள் இதோ:

முதலில் வேலிடிட்டி மீது கவனம் செலுத்தும் திட்டங்களை பற்றி பார்த்துவிடலாம். முன்னதாக ரூ.179 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை இது 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
இதேபோல ரூ.459 திட்டமானது ரூ.509 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது 84 நாட்கள் வேலிடிட்டி, 6ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. கடைசியாக வருடாந்திர திட்டமான ரூ.1,799 ஆனது தற்ப்போது ரூ.1999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை இது 24ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளன. இதன்கீழ் ரூ.269 திட்டமானது இப்போது ரூ.299 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது டெய்லி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இதேபோல
ரூ.299 திட்டமானது இப்போது ரூ.349 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
மேலும் ரூ.319 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் தற்போது ரூ.379 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, இது டெய்லி 2ஜிபி டேட்டா, நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர், டேட்டா டிலைட், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது
நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களை பொறுத்தவரை, ரூ.579 திட்டமானது ரூ.479 இல் இருந்து ரூ.579 ஆக உயர்ந்துள்ளது. இது டெய்லி 1.5ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.649 திட்டமானது ரூ.539 இல் இருந்து இப்போது ரூ.649 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 56 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ரூ.719 இல் இருந்து ரூ.859 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ள திட்டம் 1.5ஜிபி டெய்லி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது, அதே சமயம் ரூ.839 இல் இருந்து ரூ.979 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ள திட்டம் இப்போது 2ஜிபி டெய்லி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. மேற்கண்ட இரண்டு திட்டங்களிலும் ஒரே மாதிரியான கூடுதல் நன்மைகள் உள்ளன.
வருடாந்திர திட்டங்களை (Annual Plans) பொறுத்தவரை, ரூ.3499 திட்டம் ரூ.2899 இல் இருந்து விலை அதிகரித்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு 1.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்குகிறது. மெயின் ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக, வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் ஆட்-ஆன் திட்டங்களின் விலைகளை திருத்தியுள்ளது.
வோடாபோன் ஐடியாவின் 1-டே டேட்டா ஆட்-ஆன் இப்போது ரூ.19 இல் இருந்து ரூ.22 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது, இது 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 3-டே டேட்டா ஆட்-ஆன் இப்போது ரூ.39 இல் இருந்து ரூ.48 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது, இது 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








