Airtel பயனர்களின் கவனத்திற்கு.. 56 Days Plan-களை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்? இனிமேல் 3 ஆப்ஷன் தான்!
நீங்கள் ஒரு ஏர்டெல் (Airtel) கஸ்டமர் என்றால்.. 28 நாட்கள் வேலிடிட்டி (28 Days Validity) உடன் வரும் ப்ரீபெய்ட் பிளான்களை அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல்.. அதேசமயம் 84 நாட்கள் (84 Days) அல்லது 365 நாட்கள் (365 Days Validity) வேலிடிட்டி உடன் வரும் பிளான்களை ரீசார்ஜ் செய்யும் அளவிற்கு பட்ஜெட் இல்லாமல்.. பெரும்பாலும் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி (56 Days Validity) உடன் திட்டங்களை தான் நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்றால்.. இப்போது உங்களுக்கு வெறும் 3 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளது!
சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் வெவ்வேறு பயனர்களின் தேவைகள் மற்றும் பயன்பாட்டு முறைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தின் கீழ் வெவ்வேறு விலை மற்றும் வேலிடிட்டியின் கீழ் பல ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டிருந்தது. ஆனால் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ரீசாஜ் கட்டண விலை உயர்விற்கு பின்னர், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

தற்போது ஏர்டெல் நிறுவனத்திடம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும் 3 திட்டங்கள் மட்டுமே உள்ளது. அந்த மூன்று திட்டங்களில், இரண்டு மட்டுமே இலவச அன்லிமிடெட் 5G நன்மையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த 3 திட்டங்களின் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன? இதோ விவரங்கள்:
01. 56 நாட்களுக்கு டெய்லி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் தற்போதைய விலை ரூ.579 ஆகும்; பழைய விலை ரூ.479 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டியை மிகவும் மலிவான விலைக்கு வழங்கும் என்ட்ரி-லெவல் ரீசார்ஜ் ஆகும்.
மாதத்திற்கு சுமார் ரூ.290 என்கிற செலவின் கீழ், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ஹெலோட்யூன் ஆகிய நன்மைகள் கிடைக்கும். டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்ததும் இந்த பிளானின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
02. 56 நாட்களுக்கு டெய்லி 2 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் விலை ரூ.649 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டி + ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி ஆபர் காம்போவை வழங்கும் என்ட்ரி-லெவல் ரீசார்ஜ் ஆகும்.
மாதத்திற்கு சுமார் ரூ.325 என்கிற செலவின் கீழ், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ஹெலோட்யூன் ஆகிய நன்மைகள் கிடைக்கும். டெய்லி 2ஜிபி முடிந்ததும் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
03. 56 நாட்களுக்கு டெய்லி 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ்: இந்த திட்டத்தின் விலை ரூ.838 ஆகும். இது ஏர்டெல் சேவையின் கீழ் 56 நாட்கள் வேலிடிட்டி + ஓடிடி நன்மைகளை வழங்கும் திட்டங்களை தேடும் பயனர்களுக்கான ஒரு பெஸ்ட் ரீசார்ஜ் ஆகும்.
மாதத்திற்கு சுமார் ரூ.419 என்கிற செலவின் கீழ், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் மற்றும் ஹெலோட்யூன் ஆகிய நன்மைகள் கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாக்கள் இலவசமாக கிடைக்கும். மேற்கண்ட 2 ஓடிடி நன்மைகளுமே 56 நாட்கள் செல்லவுப்படியாகும்.


Click it and Unblock the Notifications








