மழைநீர் தேக்கம் முதல் மரக்கிளைகள் அகற்றுதல் வரை: புகார்கள் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு.!
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் இன்று காலை வெளிவந்த தகவலின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள்தங்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது சென்னை தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பின்பு போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநாகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் உதவிகளை பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பின்பு 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாட்ஸ் ஆப் எண்களிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம்,மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம்.

இந்த தொடர்மலையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து சரங்கப் பாதைகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சென்னை நகர் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதியுற்று வருகின்றனர். பின்பு அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மழையின் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைசெயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதாவது தாழ்வான இடங்களிலும் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி நடவடிக்கை எடுப்பது, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ள நிவாரண உதவு பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெய்து வரும் தொடர்கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மழை தொடர்வதாலும், பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேளச்சேரி ராம் நகரில் பல தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதானல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பின்பு வீடுகளில் தவித்தவர்களை ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications