வெளியே ஸ்டைல் பேண்ட், உள்ளே ஹெட்செட்..!
பிரிக்கவே முடியாத சிக்கல்களை தான் 'இடியாப்ப சிக்கல்' என்பார்கள் - இது பழமொழி, புதுமொழி என்ன தெரியுமா.. இந்த காலத்தில் பிரிக்கவே முடியாதது சிக்கி பிணைந்து கொண்ட ஹெட்செட் தான்..!

அந்த அளவிற்கு 'கன்னா-பின்னா' என்று சுருட்டப்பட்டு சிக்கி கொண்ட ஹெட்செட்களை பிரித்து எடுப்பதற்க்குள் பாட்டு கேட்கும் நினைப்பே நமக்கு மறந்து போகும், அப்படித்தானே இனி அந்த கவலையே வேண்டாம். வந்து விட்டது - ஹேலிக்ஸ்..!
இது அழகான ஒரு ப்ரேஸ்லெட் போல தான் இருக்கும், இதற்குள் ஹெட்செட் ஒன்றும் உள்ளது. இதை வயர் இல்லாமல் ப்ளூ-டூத் மூலமாக உங்கள் ஸ்மார்ட்போனுடன் இதை இணைத்துக் கொள்ள முடியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கருவி அல்ல, இது ஒரு துணைக்கருவி மட்டுமே என்கிறது இதை தயாரித்த நிறுவனம்.

மூன்று மணி நேரம் வரை பேட்டரி லைஃப் கொண்ட இது, 269 டாலர் முதல் 99 டாலர் வரை பல தரப்பட்ட வகைகளில் கிடைக்கின்றன. இந்த ஹேலிக்ஸ் வடிவமைப்பின் முக்கிய நோக்கமே செயல்பாடு மற்றும் புதுமை என்பது நன்றாகவே தெரிகிறது..!


Click it and Unblock the Notifications